For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு.. மகளிர், ஆடவர் அணி கேப்டன்கள் அதிரடி மாற்றம்

By Veera Kumar

டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள, இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலுமே கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் அடுத்தமாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ரீது ராணி ஆகும்.

Rio Olympics: Indian hockey teams announced; Ritu Rani dropped

அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள உத்தேச மகளிர் அணிக்கான பயிற்சி முகாம் பெங்களூரில் நடைபெற்றது. அது சனிக்கிழமையோடு முடிந்தது. 16 பேர் கொண்ட இறுதி அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரீது ராணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அவர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே இன்று ஆண் மற்றும் மகளிர் ஹாக்கி அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டன. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனாக ஸ்ரீஜேஷ் செயல்படுவார் எனவும், மகளிர் அணி கேப்டனாக சுசீலா சானு செயல்படுவார்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரீத்து ராணிக்கு அணியிலும் இடம் கிடைக்கவில்லை. ஆண்கள் அணியில், சர்தார் சிங்க்கு பதிலாக கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கேப்டனாக செயல்படுவார்.

ஆண்கள் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் சிங், ருபீந்தர்பால் சிங், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், வி.ஆர்.ரகுநாத், சர்தார் சிங், தேவிந்தர் வால்மிகி, தனிஷ் முஜ்தபா, சிங்லென்சனா சிங், மன்ப்ரீத் சிங், எஸ்.கே.உத்தப்பா, எஸ்.வி.சுனில் (துணை கேப்டன்), அக்ஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், நிக்கின் திம்மைய்யா, பிரதீப் மோர், விகாஸ் தாகியா மற்றும் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (கோல் கீப்பர்).

பெண்கள் அணி விவரம்: சவிதா (கோல் கீப்பர்), அனுராதா தேவி, பூனம் ராணி, வந்தனா கத்தாரியா, ப்ரீத்தி துபே, ராணி ராம்பால், நவ்ஜோத் கவுர், மோனிகா, ரேணுகா யாதவ், லிலிமா மின்ஸ், நிக்கி பிரதான், சுஷிலா ஷானு (கேப்டன்), தீப் கிரேஸ் எகக்கா, தீபிகா (துணை கேப்டன்), நமதி தோப்பூ, சுனிதா லக்ரா, ரஜனி எடிமர்பு, மற்றும் லால்ரவுட் பெலி.

இந்திய அணி கடைசியாக 2012 லண்டன் போட்டியில் 12வது இடத்தைப் பிடித்தது. ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற சாதனை படைத்த அணி இந்தியா. ஆனால், 1984 முதல் இந்திய அணி படு மோசமாகவே ஒலிம்பிக்கில் விளையாடி வருகிறது. இந்திய மகளிர் அணி கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில்தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 12, 2016, 15:14 [IST]
Other articles published on Jul 12, 2016
English summary
The Indian men's and women's hockey teams for Rio Olympics 2016 were announced today (July 12). Captain Ritu Rani was dropped from the side. Goalkeeper PR Sreejesh will lead the men's squad while Sushila Chanu has been given the captaincy duties for women's side.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X