For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரோ கபடிலீக்: விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலம்.. இளம் வீரர்களை தட்டித்தூக்கிய தமிழ் தலைவாஸ்- முழு விவரம்

சென்னை: ப்ரோ கபடி லீக் தொடருக்காக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி இளம் படையை தட்டித்தூக்கியுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான தொடராக ப்ரோ கபடி லீக் நடைபெற்று வருகிறது.

7 சீசன்களாக கோலகலமாக நடைபெற்று வந்த ப்ரோ கபடி லீக் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டது.

சொல்லாமல் கொள்ளாமல் பாக். சென்ற “இந்திய கபடி அணி”.. மாலையிட்டு வரவேற்ற பாகிஸ்தான்.. வெடித்த சர்ச்சை!சொல்லாமல் கொள்ளாமல் பாக். சென்ற “இந்திய கபடி அணி”.. மாலையிட்டு வரவேற்ற பாகிஸ்தான்.. வெடித்த சர்ச்சை!

8வது சீசன் தொடர்

8வது சீசன் தொடர்

தற்போது 8வது ப்ரோ கபடி லீக் தொடர் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெற திட்டமிட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் மோதிக்கொள்ளும் இந்த தொடரில் 161 வீரர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தம் 59 வீரர்கள் தங்களுடைய அணிகளால் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிகேஎல் ஏலம்

பிகேஎல் ஏலம்

இந்நிலையில் கடந்த 2 சீசனில் இடம் பிடித்த வீரர்கள் உள்பட தக்கவைக்கபடாத வீரர்களுக்கான ஏலம் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி முதல் 31ம் தேதிவரை மும்பையில் நடைபெற்றது. ஏலத்தில் ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வீரர்களின் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.4.4 கோடி செலவு செய்யலாம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இடம் பெற அனுமதிக்கப்பட்டது.

தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ்

3 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணி நட்சத்திர வீரர்களை களமிறக்கியுள்ளது. குறிப்பாக இளம் ரைடர்கள் மீது அதிக தொகையை தமிழ் தலைவாஸ் அணி முதலீடு செய்துள்ளது. அதன்படி மன்ஜீத் ரூ.92 லட்சம், கே.பிரபஞ்சன் ரூ.71 லட்சம், அதுல் எம்.எஸ் ரூ.30 லட்சம், அஜிங்கியா அசோக் பவார் ரூ.19.5 லட்சம், பவானி ராஜ்புட் ரூ.10லட்சம் ஆகியோரை ரைடர்களுக்காக எடுத்துள்ளது.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

இதுமட்டுமல்லாமல், அனுபவ வீரரான சுஜ்ரீத் சிங்கை டிஃபன்ஸுக்காக ரூ.75 லட்சத்திற்கு எடுத்துள்ளது. முகமது துஹின், சஹில் ஆகியோர் டிஃபன்ஸுக்காக ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதே போல ஆல்ரவுண்டர்களாக ரூ.15 லட்சம், அன்வர் சஹீத் பாபா ரூ.10 லட்சம், சாகர் ரூ.10 லட்சம் மற்றும் சாதப்பன்செல்வம் ரூ.10 லட்சம் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். டிஃபண்டர்களான ஹிமான்ஷு, அபிஷேக், சாகர் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இளம் வீரர்களை அதிகளவில் களமிறக்கியுள்ளதால், தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை புது உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, September 1, 2021, 15:27 [IST]
Other articles published on Sep 1, 2021
English summary
Tamil Thalaivas spends Huge amount on young raiders for PKL 8th season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X