For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபிலிம்பிக்ஸ் என்றால் என்ன??.. பலரது கவனத்தை ஈர்த்த 2 இந்தியர்கள்.. பலருக்கும் தெரியாத போட்டிகள்!

சென்னை: சர்வதேச அபிலிம்பிக்ஸ் தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர் தென்னிந்தியாவை சேர்ந்த சாய் கிருஷ்ணா மற்றும் மோஹித் மெஜெடி

உலகளவில் ஒலிம்பிக் போட்டிகள், பாராலிம்பிக் மற்றும் ஆசியகோப்பை என பல்வேறு தொடர்கள் விளையாட்டு துறையினரின் திறமையை வெளிக்காட்ட உள்ளன. அதில் இருந்து சற்றே மாறுபட்டுள்ளது தான் இந்த அபிலிம்பிக்ஸ்

இது விளையாட்டு போட்டி கிடையாது. ஆனால் இதுவும் திறமையை நிரூபிக்கும் ஒரு இடம் தான். அதாவது தனிநபரிடம் உள்ள வித்தியாசமான திறமைகளை இதில் வெளிகாட்டி பரிசுகள் வழங்கப்படும்.

14 specially-abled Indian contestants at Abilympics

பேக்கரி, சைக்கிள் அசம்பிளிங், கேபினெட் மேகிங், வலைதளம் உருவாக்குதல், டேட்டா பிராசஸ்சிங், ஊடகவியாளர்கள் என பல துறை சார்ந்த திறமைகளை வெளியுலகிற்கு காட்டலாம். ஆனால் இது மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து 22 நாடுகளை சேர்ந்த 410 பேர் இந்தாண்டுக்கான அபிலிம்பிக்ஸில் பங்கேற்கின்றனர். இதில் 45 வகையான திறமைகளுக்கு போட்டி நடைபெறும்.

10வது சீசன் வரும் மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து மொத்தமாக 14 பேர் கலந்துக் கொள்ளவுள்ளனர். அதில் தனி கவனம் ஈர்த்துள்ளவர்கள் தான் விஜயவாடாவை சேர்ந்த மோஹித் மெஜெடி மற்றும் சென்னையை சேர்ந்த பி.சாய் கிருஷ்ணன். இவர்கள் இருவரும் அவுட்டோர் போட்டோகிராஃபி பிரிவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

25 வயதாகும் மெஜெடிக்கு 3 விரல்கள் மட்டுமே கையில் உள்ளன. எனினும் தனது விடாமுயற்சியால் பல அட்டகாசமான புகைப்படங்களை எடுத்துள்ளார். 2016ம் ஆண்டு ஃபோட்டோகிராஃபி துறைக்குள் நுழைந்த அவர், தற்போது முதல்முறையாக அபிலிம்பிக்ஸ் தொடரில் கலந்துக்கொள்ளவுள்ளார். மறுபுறம் சென்னையை சேர்ந்த சாய் கிருஷ்ணன் 3வது முறையாக இந்த தொடரில் கலந்துக்கொள்கிறார். இதற்கு முன் கலந்துக்கொண்ட 2 சீசன்களில் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

Story first published: Monday, March 20, 2023, 15:14 [IST]
Other articles published on Mar 20, 2023
English summary
14 specially-abled Indian contestants at Abilympics, here is the full details of the Matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X