21 வீரர்கள் பலி.. மாரத்தான் போட்டியில் சோக சம்பவம்.. மோசமான பகுதி என தெரிந்தும் நடத்தியதால் விபத்து!

கன்சு: சீனாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்ட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கு கன்சூ மாகாணத்தின் ஆண்டு தோறும் நெடுந்தூர மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டுக்கான மாரத்தான் போட்டி சமீபத்தில் தொடங்கியது. மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த போட்டியில் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாரத்தான் போட்டி

மாரத்தான் போட்டி

பையின் நகரில் உள்ள மலைப்பகுதியில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதில் மொத்தமாக 172 பேர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கிய சில மணி நேரங்களில் ‘ஸ்டோன் ஃபாரஸ்ட்' பகுதியில் திடீரென மோசமான வானிலை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை ஏற்பட்டதால் இரவு நேரத்தில் வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.

வீரர்கள் பலி

வீரர்கள் பலி

இதனையடுத்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக அங்கு சென்று முதற்கட்டமாக 18 பேரை காப்பாற்றினர். இதன் பின்னர் 2 மணி அளவில் போட்டி ரத்து நிறுத்தப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் தொடங்கியது. ஆனால் நேரம் போக போக காற்றின் வேகம், உறைபணி, கனமழை என அடுத்தடுத்து பிரச்னை அதிகரித்ததால் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதன் விளைவாக 20 பேர் கனமழையில் சிக்கி உயிரிழந்தனர். 151 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஒரு நபரை மட்டும் காணவில்லை என தகவல் வெளியானது இதனையடுத்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், அவரை காலை 9.30 மணியளவில் கண்டுபிடித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்தது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

மீட்கப்பட்டவர்களில் பலர் மிகக்குறைந்த உடல் வெப்பநிலையில் ஆபத்தான முறையில் உள்ளனர். 8 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் கடும் குளிரில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

கன்சு மாகனமானது சீனாவின் மிக கோசமான மலைப்பகுதிகளை கொண்டது ஆகும்.

அங்கு கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 1000 மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிபட்ட மோசமான இடம் என்றும் தெரிந்தும் அங்கு போட்டி நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
21 Runners Dead for Extreme Weather Hits in China Marathon
Story first published: Sunday, May 23, 2021, 11:26 [IST]
Other articles published on May 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X