For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய விளையாட்டு மையத்திலேயும் பரவியிருக்கு கொரோனா... 26 பேர் பாதிப்பு

புதுடெல்லி : பாட்டியாலாவின் தேசிய விளையாட்டு மையத்தில் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எடுக்கப்பட்ட கோவிட் -19 பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சாய் தெரிவித்துள்ளது.

இதில் இந்திய பாக்சிங் தலைமை கோச் சிஏ குட்டப்பா மற்றும் ஷாட் புட் கோச் மொஹிந்தர் சிங் திலான் ஆகியோரும் அடக்கம்

ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சாய் தெரிவித்துள்ளது.

26 பேருக்கு கொரோனா பாதிப்பு

26 பேருக்கு கொரோனா பாதிப்பு

பாட்டியாலாவின் தேசிய விளையாட்டு மையத்தில் உள்ள 380 வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாய் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனைகள் முழுமையான வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

இதில் ஆண்கள் பாக்சிங் தலைமை கோச் சிஏ குட்டப்பா, ஷாட் புட் பயிற்சியாளர் மோஹிந்தர் சிங் திலான ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஒலிம்பிங்கில் பங்கேற்கவுள்ள வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் சாய் தெரிவித்துள்ளது.

சிறப்பான பராமரிப்பு

சிறப்பான பராமரிப்பு

இதையடுத்து கொரோனா பாதித்துள்ள 26 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, வளாகம் முழுவதும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு மையத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள குத்துச்சண்டை வீரர்கள், தடகள வீரர்கள், பளுதூக்கும் வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிபிபடத்தக்கது.

சாய் அறிவிப்பு

சாய் அறிவிப்பு

இதில் ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள குத்துச்சண்டை வீரர் தீபக் குமார் மற்றும் இந்திய ஓபன் கோல்ட் மெடல் வீரர் சஞ்சித் ஆகியோருக்கும் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் ரிசல்ட் வர வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Wednesday, March 31, 2021, 20:59 [IST]
Other articles published on Mar 31, 2021
English summary
Around 380 athletes at the NIS Patiala were tested for COVID recently
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X