For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது அம்பயர் சதி: அஜ்மல் குற்றச்சாட்டு

By Veera Kumar

அடிலெய்டு: உமர் அக்மலுக்கு அவுட் கொடுத்த விவகாரத்தில் மூன்றாவது நடுவரான ஸ்டீவ் டேவிஸ் வேண்டுமென்றே சதி செய்துவிட்டதாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சையது அஜ்மல் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் நடுவே நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 301 என்ற இலக்கை துரத்திச் சென்ற பாகிஸ்தானில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து நடையை கட்டியதால் இந்தியா எளிதாக வென்றது.

உமர் அக்மல் அவுட்டால் சர்ச்சை

உமர் அக்மல் அவுட்டால் சர்ச்சை

இதனிடையே பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான உமர் அக்மலுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டோணி கேட்ச்

டோணி கேட்ச்

உமர் அக்மல் ரன் ஏதும் எடுக்காமல் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா ஆப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை சுழலும் வகையில் வீசினார். அதை தடுத்தாட முயன்றபோது பந்து பேட்டை தாண்டி விக்கெட் கீப்பர் டோணியிடம் தஞ்சம் அடைந்தது. டோணியும் அவுட் என்று நினைத்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். ஆனால் கள நடுவர் அவுட் தரவில்லை.

3வது நடுவர் ஆய்வு

3வது நடுவர் ஆய்வு

இதையடுத்து மூன்றாவது நடுவரிடம் மறு ஆய்வுக்கு செல்வதாக கேட்டுக் கொண்டார் டோணி. இதையடுத்து மூன்றாவது நடுவர் ஸ்டீவ் டேவிட் ரிப்ளே செய்து ஆய்வு செய்தார். ஸ்னிக்கோ மீட்டர் எனப்படும் நவீன கருவியை கொண்டும் பேட்டில் பந்து பட்டதா இல்லையா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

பேட்டில் பட்டமாதிரி இல்லை

பேட்டில் பட்டமாதிரி இல்லை

கிரிக்கெட்டை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி சேனல் வழியாக, ஸ்னிக்கோ மீட்டர் செயல்பாட்டை உலகெங்கும் உள்ள ரசிகர்களும் பார்க்க முடிந்தது. பந்து பேட்டை தாண்டி சென்றபோது ஸ்னிக்கோ மீட்டர் எந்த வித அசைவுமின்றி அப்படியே காணப்பட்டது. எனவே தொலைக்காட்சி வர்ணனையாளர்களும்கூட அதை அவுட் இல்லை என்று கூறிவிட்டனர்.

அவுட் கொடுத்த மூன்றாம் நடுவர்

அவுட் கொடுத்த மூன்றாம் நடுவர்

ஆனால் ஸ்டீவ் டேவிட்டிடமிருந்து களநடுவருக்கு வந்த தகவலோ வேறுமாதிரி இருந்தது. அதாவது உமர் அக்மல் அவுட் என்று அறிவித்துவிட்டார். களநடுவரும் விரலை தூக்கி அவுட் என்பதை காட்டிவிட்டார். இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமே ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களிடம் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்பவுமே அந்த நடுவர் அப்படித்தான்

எப்பவுமே அந்த நடுவர் அப்படித்தான்

இதுகுறித்து பாகிஸ்தானின் சுழற்பந்து நட்சத்திரமான சையது அஜ்மல் கூறுகையில், ஸ்டீவ் டேவிஸ் களநடுவராக இருந்த போட்டிகளில் நான் பந்து வீசியுள்ளேன். எல்பிடபிள்யூ, விக்கெட் கீப்பர் கேட்ச் போன்ற சந்தர்ப்பங்களில் நான் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும், ஸ்டீவ் டேவிஸ் கையை தூக்கியது கிடையாது. எனவே மறு ஆய்வுக்கு சென்றே விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

பாகிஸ்தான் என்றால் ஆகாது..

பாகிஸ்தான் என்றால் ஆகாது..

2009ல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இதே ஸ்டீவ் டேவிட், பாகிஸ்தான் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே குரோதம் கொண்டிருப்பவர் ஸ்டீவ் டேவிஸ். எங்களுடனான போட்டிகளின்போது ஸ்டீவ் டேவிஸ் நடுவராக இருக்க கூடாது என்ற கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்துவருகிறது. ஸ்னிக்கோ மீட்டர் அவுட் காட்டவில்லை, பேட்டில் பந்து பட்டதற்கான சத்தம் வரவில்லை. இருப்பினும் ஏன் மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க வேண்டும்?

தொழில்நுட்பம் சரியில்லை

தொழில்நுட்பம் சரியில்லை

2011ம் ஆண்டு உலக கோப்பையின்போது, இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மோதியது. அப்போது எனது பந்து வீச்சில் சச்சினுக்கு களநடுவர் எல்பிடபிள்யூ கொடுத்தார். அதை எதிர்த்து மறு பரிசீலனை செய்ய சச்சின் கேட்டார். இத்தனைக்கும் அது சரியான அவுட்தான் என்று கம்பீர் சச்சினிடம் கூறினார். ஆனால் மூன்றாம் நடுவரோ அதை அவுட் இல்லை என்று கூறினார். தொழில்நுட்பங்களும் தவறிழைக்கவே செய்கின்றன. இவ்வாறு அஜ்மல் கூறினார்.

அணியில் சேர்க்கப்படாத அஜ்மல்

அணியில் சேர்க்கப்படாத அஜ்மல்

பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டு ஐசிசியால் தடை விதிக்கப்பட்ட அஜ்மல், உலக கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பு மீண்டும் தகுதி பெற்றார். ஆனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் அவரை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் நம்பர்1 இடத்தை பிடித்த பவுலர் அஜ்மல் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 16, 2015, 12:34 [IST]
Other articles published on Feb 16, 2015
English summary
Pakistan off-spinner, Saeed Ajmal today alleged that ICC umpire, Steve Davis had victimized Pakistan after he ruled Umar Akmal caught behind on a referral decision during their high-octane World Cup opener against India in Adelaide.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X