For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு… இன்று 4ஆம் நாள்… இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன?

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று நான்காம் நாளில் கால் வைத்துள்ளது. இந்தியா இது வரை 10 பதக்கங்ககளை பெற்றுள்ளது. முதல் நாள் 2 பதக்கங்கள், இரண்டாம் நாள் 3 பதக்கங்கள், நான்காம் நாள் 5 பதக்கங்கள் என பதக்கங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே சமயம், துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் மட்டுமே 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதிகம் அறியப்படாத செபக்டக்ராவ் என்ற விளையாட்டில் நேற்று ஒரு வெண்கலம் கிடைத்தது. வுஷு விளையாட்டில் நான்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. அவை தங்கமாக கிடைத்தால் இந்தியாவிற்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும்.

நான்காம் நாள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் நேர அட்டவணையை கீழே காணலாம்.

Asian Games 2018 Day 4 Schedule for India

வில்வித்தை

  • காலை 8.00 - பெண்கள் காம்பவுண்ட் பிரிவு - த்ரிஷா தேப், ஜோதி சுரேகா வென்னாம், மதுமிதா குமாரி, முஸ்கான் கிரார்
  • மதியம் 1.30 - ஆண்கள் காம்பவுண்ட் பிரிவு - சங்க்ராம்ப்ரீத் சிங், அபிஷேக் வர்மா, ராஜத் சவ்ஹான், அமான் சைனி

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்

  • மதியம் 1.00 - ஆண்கள் பிரிவு
  • மாலை 5.00 - பெண்கள் அணி இறுதிச் சுற்று - பிரனிதி, அருணா (வால்ட்), தீபா கர்மாகர் (பேலன்ஸ் பீம்)

பிரிட்ஜ்

  • காலை 9.00 - ஆண்கள் அணி தகுதிச் சுற்று
  • காலை 9.00 - கலப்பு அணி (ரவுண்டு ராபின் 1)
  • காலை 9.00 - சிறப்பு கலப்பு அணி தகுதிச் சுற்று

பீல்ட் ஹாக்கி

  • மதியம் 12.30 - இந்தியா x ஹாங்காங்

துப்பாக்கி சுடுதல்

  • காலை 8.00 - 50மீட்டர் ரைபிள் 3 பொசிசன் பெண்கள் பிரிவு - அன்ஜும் மௌட்கில், காயத்ரி
  • காலை 11.30 - 50மீட்டர் ரைபிள் 3 பொசிசன் பெண்கள் பிரிவு - தங்கப் பதக்கத்துக்கான போட்டி (தகுதி பெற்றால்)
  • காலை 8.00 - 25மீட்டர் பிஸ்டல் பெண்கள் தகுதிச் சுற்று - மானு பாகர், ராஹி சர்னபாட்
  • காலை 10.00 - 25மீட்டர் பிஸ்டல் பெண்கள் தகுதிச் சுற்று
  • காலை 11.30 - 25மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவு - தங்கப் பதக்கத்துக்கான போட்டி (தகுதி பெற்றால்)

நீச்சல்

  • காலை 8.00 - 100 மீட்டர் பட்டர்பிளை தகுதிச் சுற்று - அவினாஷ் மணி, சஜன் பிரகாஷ்
  • மாலை 5.00 - 100 மீட்டர் பட்டர்பிளை - தங்கப் பதக்கத்துக்கான போட்டி (தகுதி பெற்றால்)
  • காலை 8.00 - 100 மீட்டர் ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக் தகுதிச் சுற்று - சந்தீப் செஜ்வால்
  • மாலை 5.23 - 100 மீட்டர் ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக் தகுதிச் சுற்று - தங்கப் பதக்கத்துக்கான போட்டி (தகுதி பெற்றால்)
  • காலை 8.30 - 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே - ஹீட் 1
  • மாலை 5.00 - 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே - தங்கப் பதக்கத்துக்கான போட்டி (தகுதி பெற்றால்) 1

டேக்வாண்டோ

  • காலை 8.45 - ஆண்கள் 80கிலோ - 32 நபர்கள் சுற்று - நவ்ஜீத் மான்

டென்னிஸ்

  • காலை 9.00 - ஆண்கள் ஒற்றையர் - 16 நபர்கள் சுற்று - ராம்குமார் ராமனாதன் மற்றும் குன்னேஸ்வரன் பிரபாகரன்
  • காலை 11.00 - ஆண்கள் இரட்டையர் காலிறுதி - ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண்
  • காலை 8.30 - பெண்கள் ஒற்றையர் காலிறுதி - அங்கிதா ரெய்னா
  • பெண்கள் ஒற்றையர் காலிறுதி முடிந்தவுடன் - பெண்கள் இரட்டையர் 16 நபர்கள் சுற்று - அங்கிதா ரெய்னா, பிரார்த்தனா தொம்பரே

வாலிபால்

  • மாலை 6.00 - ஆண்கள் - இந்தியா x கத்தார்

மல்யுத்தம்

  • மதியம் 12.௦௦ - ஆண்கள் கிரக்கோ ரோமன் 77 கிலோ - குர்ப்ரீத் சிங்
  • மதியம் 12.௦௦ - ஆண்கள் கிரக்கோ ரோமன் 87 கிலோ - ஹர்ப்ரீத் சிங்
  • காலை 11.48 - ஆண்கள் கிரக்கோ ரோமன் 97 கிலோ - ஹர்தீப்
  • மதியம் 1.௦6 - ஆண்கள் கிரக்கோ ரோமன் 130 கிலோ - நவீன்

வுஷு

  • காலை 8.00 - பெண்கள் சாண்டா அரையிறுதி - ரோஷிபினா தேவி
  • காலை 8.00 - ஆண்கள் சாண்டா அரையிறுதி - சந்தோஷ் குமார், பிரதாப் சிங், நரேந்தர் கிரேவால்
Story first published: Wednesday, August 22, 2018, 11:31 [IST]
Other articles published on Aug 22, 2018
English summary
Asian Games 2018 Day 4 Schedule for Games in which Indian Players are participating.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X