For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமே கொரோனாவால் தத்தளிக்க.. கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்கள்

வாஷிங்டன்: உலகம் முழுக்க பரவிய கொரோனா, பல துறைகளை முடங்கச் செய்து, பலரது வாழ்வாதாரத்தையே காலி செய்து கொண்டிருக்கும் சூழலில், விளையாட்டு வீரர்களின் பாக்கெட்டுகளில் கோடிக் கணக்கில் வருமானம் கொட்டுகிறது.

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் (Forbes) அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும். அதன்படி, உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

நாங்க மட்டும் சும்மாவா.. புதிய வரலாறு படைக்கும் இந்திய மகளிர் அணி.. பிசிசிஐ போட்ட சூப்பர் ப்ளான்! நாங்க மட்டும் சும்மாவா.. புதிய வரலாறு படைக்கும் இந்திய மகளிர் அணி.. பிசிசிஐ போட்ட சூப்பர் ப்ளான்!

விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 'Forbes' எனும் பிராண்டில் தங்கள் பெயர் வருவதையே விளையாட்டு வீரர்கள் பெருமையாக எண்ணுவார்கள்.

இது போன வருஷ லிஸ்ட்

இது போன வருஷ லிஸ்ட்

கடந்த ஆண்டு உலகின் டாப் பணக்கார விளையாட்டு வீரராக சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 106.3 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். அதேபோல், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 105 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாமிடமும், லயோனல் மெஸ்ஸி 104 மில்லியன் டாலர் வருமானத்துடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.

விளையாட்டுக்கு வெளியே

விளையாட்டுக்கு வெளியே

இந்த நிலையில், 2021 ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கலப்பு தற்காப்பு கலை வீரர் Conor McGregor 180 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். கடந்தாண்டு டாப் லிஸ்டில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி, ஃபெடரர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக முதலிடம் பிடித்தார் McGregor . தனது துறையில் இவர் சம்பாதிக்கும் தொகை 22 மில்லியன் மட்டுமே. இதர 158 மில்லியன் டாலர் விளம்பரம் மற்றும் இன்னபிற நிகழ்வுகளில் இருந்து பெறுகிறார்.

ரொனால்டோ

ரொனால்டோ

இராண்டாம் இடத்தை பிடித்தது லயோனல் மெஸ்ஸி. வருமானம் 130 மில்லியன் டாலர். சரியாக McGregor-ஐ விட 50 மில்லியன் டாலர் குறைவு. மூன்றாம் இடத்தில் கிறிஸ்டியானால் ரொனால்டோ இருக்கிறார். இவரது வருமானம் 120 மில்லியன் டாலர். நான்காவது இடத்தில் 'அமெரிக்கன் ஃபுட்பால்' வீரர் டேக் பிரஸ்கோட் இருக்கிறார். இவரது வருமானம் 107.5 மில்லியன் டாலர். ஐந்தாவது இடத்தில் உள்ள அமெரிக்கன் பேஸ்கெட் பால் வீரர் லெப்ரான் ஜேம்ஸ் வருமானம் 96.5 மில்லியன் டாலர். பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 95 மில்லியன் டாலருடன் ஆறாவது இடத்திலும், ரோஜர் ஃபெடரர் 90 மில்லியன் டாலருடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர். ஃபார்முலா 1 ரேஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் 82 மில்லியன் டாலருடன் எட்டாவது இடத்திலும், அமெரிக்கன் கால்பந்து வீரர் டாம் பிராடி 76 மில்லியன் டாலருடன் ஒன்பதாவது இடத்திலும், கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட் 75 மில்லியன் டாலருடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

கொரோனா காரணமாக, பல்வேறு துறைகளைப் போல விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் குறைக்கப்பட்டுவிட்டன. அதனால், வீரர்களின் ஊதியமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்கார வீரர்களின் பட்டியல் மூலம், இந்த பெருந்தொற்று காலத்திலும் விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிகிறது.

விற்கப்பட்ட பங்குகள்

விற்கப்பட்ட பங்குகள்

இதில் முதலிடம் பிடித்த McGregor வருமானத்தில் 22 மில்லியன் டாலர் தவிர, மீதமுள்ள 158 மில்லியன் டாலர் களத்திற்கு வெளியே இருந்து அவர் சம்பாதித்த தொகையாகும். போர்ப்ஸ் அறிக்கையின் படி, டைகர் வுட்ஸ் மற்றும் ரோஜர் பெடரருக்கு பிறகு, ஒரே வருடத்தில் 70 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை, விளையாட்டை தாண்டி வருமானம் பார்த்த மூன்றாவது வீரராகிறார். இதில், 2018ல் இவர் தொடங்கிய மதுபான நிறுவனத்தின் பல பங்குகளை விற்றதன் மூலம் இவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. ஈஎஸ்பிஎன் அறிக்கையின்படி, பங்குகளை விற்பனை செய்ததில் McGregor மற்றும் அவரது பார்ட்னர்கள் இணைந்து 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளனர்.

மிகப்பெரிய பலம்

மிகப்பெரிய பலம்

என்ன தான் தொழில் என்றாலும், இவரது பிரபல்யம் அந்த மதுபான நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருக்கும் 39.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் மற்றும் ட்விட்டரில் பின்தொடரும் 8.7 மில்லியன் பாலோயர்கள் இவரது மிகப்பெரிய பலம்.

3 பேர் எப்போதும்

3 பேர் எப்போதும்

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வரும் பணக்கார வீரர்கள் பட்டியலில், மூன்று பேர் தொடர்ந்து டாப் 10 இடங்களில் இடம் பிடிக்கின்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிபிரான், ரோஜர் பெடரர் ஆகியோர் மூன்று பேர் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Story first published: Thursday, May 20, 2021, 19:04 [IST]
Other articles published on May 20, 2021
English summary
athletes earned millions even corona pandemic - விளையாட்டு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X