For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடப்பாவமே... 9 நகர்த்தல்களில் பில் கேட்ஸை தோற்கடித்த மேக்னஸ் கார்ல்சன்

ஸ்டாக்ஹோம்: ஸ்டாக்ஹோமில் நடந்த செஸ் போட்டியில் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸுடன், உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மோதினார். அதில் 9 நகர்த்தல்களிலேயே கேட்ஸுக்கு செக் மேட் வைத்து அவரை தோற்கடித்தார்.

அதி வேகமாக நடந்த போட்டியாக இது அமைந்து போனது. நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரெட்ரிக் ஸ்காவ்லன், கார்ல்சனுடன் மோதுவதற்கு யார் தயார் என்று ஒரு ஜாலியான சவால் விட்டிருந்தார். அதை கேட்ஸ் ஏற்றார். ஆனால் 9 நகர்த்தல்களிலேயே அவரது சவால் முடிவுக்கு வந்தது.

Bill Gates takes on world chess champ, mated in 9 moves

உலகின் 2வது பெரும் பணக்காரராக போர்ப்ஸ் இதழால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேட்ஸ், தனது நகர்த்தல்களுக்கு மொத்தம் 2 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் கார்ல்சனோ, 30 விநாடிகளில் போட்டியை முடித்து விட்டார்.

23 வயதான கார்ல்சன் முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தை சென்னையில் நடந்த உலக செஸ் போட்டியில் தோற்கடித்து புதிய சாம்பியனாக மகுடம் சூட்டினார் என்பது நினைவிருக்கலாம்.

கேட்ஸ் - கார்ல்சன் மோதிய இந்தப் போட்டியைப் பதிவு செய்து டிவியிலும் ஒளிபரப்பு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 26, 2014, 12:47 [IST]
Other articles published on Jan 26, 2014
English summary
Newly crowned Norwegian world chess champion Magnus Carlsen took just nine moves to checkmate Bill Gates in a speed game to be aired later on Friday. Challenged to a game in a chat show hosted by well-known Norwegian television presenter Fredrik Skavlan and due to be shown in Norway, Denmark and Sweden, Microsoft founder Gates said before the game that the challenge had "a predetermined outcome".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X