For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"சார், இது என் 'ஒய்ஃப்' இல்லை.. உங்களுக்கான 'கிப்ட்'... !!!"

வெலிங்டன்: மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூ வின்சென்ட், பெண்களை வைத்து எப்படியெல்லாம் கிரிக்கெட் வீரர்களை வளைக்கிறார்கள் என்ற பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சதி வேலையில் தன்னையும் சிக்க வைக்க இந்திய ஏஜென்ட் ஒருவர் முயன்றதாகவும், ஆனால் அதில் தான் விழவில்லை என்றும் வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு அப்போது தொடங்கப்பட்டிருந்த கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்திருந்தபோது அழகியைக் காட்டி தன்னைச் சாய்க்க முயன்றதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய புக்கி

இந்திய புக்கி

தன்னிடம் அழகியைக் கூட்டி வந்து கவிழ்க்கப் பார்த்தவர் இந்தியாவைச் சேர்ந்த புக்கி என்றும் வின்சென்ட் கூறியுள்ளார்.

"பேட்" விற்பவர் போல வந்து!

தன்னிடம் வந்த நபர் பேட், ஷூ போன்றவை விற்பவர் போல வந்ததாகவும், ஆனால் உண்மையில் அவர் தன்னிடம் அழகியைக் காட்டி போட்டியை பிக்ஸ் செய்ய வந்த புக்கி என்றும் வின்சென்ட் கூறியுள்ளார்.

என்னுடைய ஹீரோ

என்னுடைய ஹீரோ

நியூசிலாந்தைச் சேர்ந்த டிவி மற்றும் ரேடியோ ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார் வின்சென்ட். அதில் அவர் கூறியிருப்பதாவது... என்னுடைய ஹீரோ ஒருவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருந்ததை அப்போது அறிந்து நான் அதிர்ந்தேன்.அதேபோல என்னையும் வீழ்த்தப் பார்த்தனர். ஆனால் நான் மசியவில்லை.

ஐசிஎல்லை விரும்பினேன்

ஐசிஎல்லை விரும்பினேன்

நான் ஐசிஎல் போட்டிகளில் ஆட ஆர்வமாக இருந்தேன். குடும்பத்துடன் வெளிநாடுகளில் ஆவது எப்போதுமே சுவாரஸ்யமானது. நல்ல பணமும் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.

புக்கிகள் குறித்து நல்லாத் தெரியுமே

புக்கிகள் குறித்து நல்லாத் தெரியுமே

நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் எங்களுக்கு பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. புக்கிகள் குறித்தும் நிறையச் சொல்லிக் கொடுத்துள்ளனர்.

போன் வந்தது..

போன் வந்தது..

இதற்காக நான் இந்தியா வந்திருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. எனது அறைக்குப் போன் வந்தது. மறுபக்கம் பேசிய நபர், தான் ஸ்போர்ட்ஸ் பொருட்களை விற்பவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சரி வாங்க என்றேன் நான்.

பெண்ணுடன் வந்தார்

பெண்ணுடன் வந்தார்

அந்த நபரும் வந்தார். கூடவே ஒரு பெண்ணும் வந்திருந்தார். அவர், அந்த நபரின் மனைவி என்று நான் நினைத்தேன்.

ஆனால் மனைவி இல்லை

ஆனால் மனைவி இல்லை

ஆனால் அவர் மனைவி இல்லை என்பது அரை மணி நேரம் கழித்தே தெரிந்தது எனக்கு. சரி, ஸ்போர்ட்ஸ் பொருட்களைக் காட்டுங்கள் என்றேன். லாபியில் இருப்பதாக கூறினார்.

பாத்ரூம் போக எழுந்தபோது

பாத்ரூம் போக எழுந்தபோது

பின்னார் நான் பாத்ரூம் போக எழுந்தபோது அந்த நபரும் என்னிடம் வந்து கிசுகிசுப்பாக, இந்தப் பெண் எனது நிறுவனத்தின் கிப்ட் சார். பயன்படுத்திக்கோங்க என்றபோது அதிர்ந்தேன். ஆனால் உடனடியாக மறுத்து விட்டேன் என்றார் வின்சென்ட்.

Story first published: Friday, September 12, 2014, 13:04 [IST]
Other articles published on Sep 12, 2014
English summary
Banned for life for match-fixing,disgraced New Zealand cricketer Lou Vincent revealed how an 'Indian bookie' posing as a sports equipment sponsor laid 'honeytrap' for him during the now defunct Indian Cricket League (ICL) back in 2008.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X