For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் இதயம் வலிக்கிறது.. ஆத்திரம் வருகிறது.. ஜார்ஜ் பிளாய்டு கொலையால் மைக்கேல் ஜோர்டான் கோபம்

சிகாகோ: அமெரிக்காவை உலுக்கி வரும் கருப்பர் இனத்தவர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கோபமும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கேல் ஜோர்டானும் இந்த படுகொலை குறித்து கோபம் வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக விளையாட்டைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்ட மாட்டார் ஜோர்டான். முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவிப்பதில்லை. ஒதுங்கியே இருப்பார்.

தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து வந்த மைக்கேல் ஜோர்டானையே இந்த படுகொலைச் சம்பவம் பேச வைத்து விட்டது. கோபப்பட வைத்து விட்டது.

மைக்கேல் ஜோர்டான் அறிக்கை

மைக்கேல் ஜோர்டான் அறிக்கை

மைக்கேல் ஜோர்டான் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை அவரது செயலாளர் எஸ்டீ போர்ட்னாய் வெளியிட்டுள்ளார். அதில் ஜோர்டான் கூறியிருப்பதாவது: நான் மிகவும் வேதனையுற்றுள்ளேன். இதயம் வலிக்கிறது. கோபமாக இருக்கிறேன். அனைவரின் வலியையும் உணர்கிறேன். விரக்தியில் உள்ளனர் அனைவரும். கொதித்துப் போயுள்ளனர்.

இது இனவெறித் தாக்குதல்

இது இனவெறித் தாக்குதல்

இது அப்பட்டமான இனவெறி. நமது நாட்டில் கருப்பாக உள்ள அனைவருக்கும் எதிரான வன்முறை இது. இதுவரை நாம் நிறையப் பட்டு விட்டோம். அனைவருக்கும் ஆதரவாக நான் நிற்க விரும்புகிறேன். என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் அனைவருடனும் நான் இருக்கிறேன். ஒருவருக்கொருவர் அனுதாபம் தெரிவித்துக் கொள்வோம். ஆதரவாக இருப்போம். முட்டாள்தனமான தாக்குதல்களைக் கண்டு நாம் பயந்து போய் விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து குரல் கொடுப்போம்

தொடர்ந்து குரல் கொடுப்போம்

அமைதியான முறையில் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். நமது ஒருங்கிணைந்த குரல்கள், நமது தலைவர்களின் போக்கை மாற்றட்டும். அழுத்தம் தரட்டும். நமது சட்டங்களை மாற்ற உதவட்டும். அப்படி இல்லாமல் போனால் மாற்றம் ஏற்படும் நோக்குடன் நமது குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

ஜார்ஜ் பிளாயிட் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்காகவும் நான் இரங்கல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜோர்டான். ஜோர்டான் அறிக்கை கருப்பர் இனத்தவர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 1, 2020, 13:15 [IST]
Other articles published on Jun 1, 2020
English summary
US Basket ball legend Michael Jordan says he is angry on the Death of George Floyd
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X