குறும்பா... உலகே நீதாண்டா... மகனுடன் கொஞ்சி குலவிய பாண்டியா... வீடியோ பதிவிட்ட நடாஷா!

மும்பை : 4 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய மகன் அகஸ்தியாவை பார்த்த பாண்டியா, மகிழ்ச்சியுடன் கொஞ்சிக் குலாவினார்.

இந்த வீடியோவை அவருடைய பார்ட்னர் நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவும் பதிவிட்டுள்ளார்.

ஜூலை 30ம் தேதி அகஸ்தியா பிறந்தநிலையில், ஒரு மாதம்கூட பூர்த்தியாகாத நிலையில் தன்னுடைய குழந்தையை பிரிந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாண்டியா யூஏஇ சென்றது குறிப்பிடத்தக்கது.

பிரிந்து சென்ற பாண்டியா

பிரிந்து சென்ற பாண்டியா

கடந்த ஜூலை 30ம் தேதி ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கு குழந்தை அகஸ்தியா பிறந்த நிலையில், ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், குழந்தையை பிரிந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹர்திக் பாண்டியா யூஏஇ புறப்பட்டு சென்றார்.

மகனுடன் பாண்டியா

மகனுடன் பாண்டியா

அதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய பாண்டியா, தன்னுடைய மகன் அகஸ்தியாவை சந்தித்து மகிந்துள்ளார்.

வீடியோ பதிவு

வீடியோ பதிவு

முன்னதாக ஆஸ்திரேலியாவுடன் தான் விளையாடிய இறுதி டி20 போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியா, தன்னுடைய மகனை மற்றும் குடும்பத்தினரை தான் மிகவும் மிஸ் செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, குழந்தையுடன் அவர் கொஞ்சும் வீடியோவை அவருடைய பார்ட்னர் நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பொறுப்பான பாண்டியா

பொறுப்பான பாண்டியா

இதேபோல ஹர்திக் பாண்டியாவும் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பாண்டியாவின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். குழந்தை பிறந்தவுடன் அவருக்கு பொறுப்பு வந்துவிட்டதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik returned home after a successful IPL and T20I series in Australia
Story first published: Sunday, December 13, 2020, 11:19 [IST]
Other articles published on Dec 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X