For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி- 28 வருடங்களுக்குப் பின் லார்ட்ஸில் வென்றது!

லார்ட்ஸ், லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

புதிய வரலாறு படைத்துள்ள இந்த வெற்றிக்கு வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முக்கியப் பங்கு வகித்துள்ளார். அபாரமாக பந்து வீசிய அவர் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களைச் சாய்த்து இங்கிலாந்தை நிலை குலைய வைத்து விட்டார்.

இப்போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.

28 வருடங்களுக்கு முன்பு

28 வருடங்களுக்கு முன்பு

கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1986ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

பிறக்கக் கூட இல்லை

பிறக்கக் கூட இல்லை

அப்போது, தற்போதைய இந்திய அணியின் 10 வீரர்கள் பிறந்திருக்கக் கூட இல்லை என்பது சுவாரஸ்யமானது. கிட்டத்தட்ட 3வது தலைமுறை இந்திய வீரர்கள்தான் மீண்டும் ஒரு வெற்றியை லார்ட்ஸ் மைதானத்தில் சுவைத்துள்ளனர்.

2011க்குப் பிறகு முதல் அந்நிய வெற்றி

2011க்குப் பிறகு முதல் அந்நிய வெற்றி

மேலும் 2011ம் ஆண்டுக்குப் பிறகு அந்நிய மண்ணில் இந்தியா வென்றுள்ள முதல் டெஸ்ட் வெற்றியும் இதுவேயாகும்.

அழகான வெற்றி

அழகான வெற்றி

வழக்கமாக லார்ட்ஸ் மைதானத்தில் வெளிநாட்டு அணிகள் நிறையவே திணறும். ஆனால் இளம் இந்திய வீரர்கள் அதை தவிடுபொடியாக்கி சாதித்து விட்டனர்.

இஷாந்த் - ஜடேஜா - முரளி விஜய் - புவனேஷ் குமார்

இஷாந்த் - ஜடேஜா - முரளி விஜய் - புவனேஷ் குமார்

இந்தியாவின் இந்த வெற்றிக்கு 7 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, 2வது இன்னிங்ஸில் 68 ரன்களைக் குவித்து, 3 விக்கெட்களைச் சாய்த்த ஜடேஜா, 52 ரன்கள் குவித்து, 6 விக்கெட்களையும் சாய்த்த புவனேஸ் குமார் ஆகியோர்தான் முக்கியக் காரணம். அதேபோல 95 ரன்கள் குவித்த முரளி விஜய்யும் பாராட்டுக்குரியவர்.

கடைசி நாளில் 214 ரன் இலக்கு

கடைசி நாளில் 214 ரன் இலக்கு

கடைசி நாளில் இங்கிலாந்து 6 விக்கெட்களைக் கையில் வைத்திருந்தது 214 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இஷாந்த் சர்மா அந்தக் கனவைக் கலைத்து விட்டார்.

தொடரையும் வெல்லுமா...

தொடரையும் வெல்லுமா...

கடைசியாக லார்ட்ஸில் இந்தியா வென்றபோது அந்தத் தொடரையும் சேர்த்து வென்றது. அதேபோல இப்போதும் இந்தியா தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Story first published: Monday, July 21, 2014, 19:56 [IST]
Other articles published on Jul 21, 2014
English summary
India defeated England by 95 runs after Ishant Sharma took seven wickets for 74 runs in a dramatic post-lunch session at Lord's on Monday. India, thus, took a 1-0 lead in the five-Test series. The first Test at Nottingham ended in a draw. The third Test starts in Southampton on July 27. The last time India won a Test at Lord's, 10 players in the current touring party were not even born. A 28-year-long wait came to an emphatic end on Monday when the third generation of Indians since 1986 battled past England at their most formidable fortress. This was India's first overseas Test win since 2011.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X