மகளிர் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்.. சிங்கப்பூரை வீழ்த்தி கலக்கிய கேர்ள்ஸ்

Posted By:

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்னொரு தங்கம் கிடைத்து இருக்கிறது. பைனல்ஸ் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில், இந்தியாவுக்கு கடைசியாக நடந்த போட்டியோடு சேர்த்து இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என, 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Indian womens team in table tennis finals of CWG

பாட்மின்டன் அணி, குத்துச்சண்டையில் மேரி கோம் என, மேலும் சில பதக்கங்கள் தயாராக உள்ளன. இந்த நிலையில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தற்போது இந்த தங்க பதக்கம் வென்றுள்ளது. இந்திய மகளிர் அணி, பைனல்ஸில் சிங்கப்பூருடன் மோதியது.

மகளிர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியா 3-0 என இலங்கையை வீழ்த்தியது இரண்டாவது லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் காலிறுதிக்கு மகளிர் அணி முன்னேறியது. நேற்று நடந்த கால் இறுதியில் மலேசியாவை 3-1 என்ற கணக்கில் வென்றது.

இன்று நடந்த அரை இறுதியில் இங்கிலாந்து அணியை 3-0 என வென்றது. அரை இறுதியில் முதலில் நடந்த ஒற்றையரில் மணிகா பத்ரா 9-11, 11-7, 11-5, 11-7 என்ற கணக்கில் வென்றார். மற்றொரு ஒற்றையரில் மதுரிகா பட்கர் 11-7, 13-11, 10-12, 11-8 என்ற கணக்கில் வென்றார். பின்னர் நடந்த இரட்டையரில் மவுமா தாஸ், மதுரிகா பட்கர் ஜோடி 11-7, 8-11, 11-7, 11-1 என்ற கணக்கில் வென்றனர்.

இந்த நிலையில் இன்று நடந்த பைனல்சில் சிங்கப்பூரை சந்தித்தது இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி. மணிகா பத்ரா மற்றும் மதுரிகா பட்கர் இணை 3-1 என்ற கணக்கில் த்ரில் போட்டியில் சிங்கப்பூர் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை வென்றுள்ளது

English summary
indian women table tennis team enters finals of commonwealth games. assured medal for india
Story first published: Sunday, April 8, 2018, 13:39 [IST]
Other articles published on Apr 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற