For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்த்து ஊசி போடுங்க.. விதிகளை மறந்துடாதீங்க.. இந்திய ஒலிம்பிக் கவுன்சில் அறிவுறுத்தல்

By Aravinthan R

டெல்லி: இந்திய ஒலிம்பிக் கவுன்சில், தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏசியன் கேம்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஊசிகள் மற்றும் மருந்துகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிகளை அறிவுறுத்தியுள்ளது.

ஊக்கமருந்து தொடர்பான சர்ச்சைகளை முடக்கும் வகையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஏற்படுத்திய விதிகளை ஒட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ioc instructs strict guidelines for using injections during asian games


இந்திய ஒலிம்பிக் கவுன்சில் எழுதி உள்ள இந்த கடிதத்தில் ஊசிகள் மற்றும் மருந்துகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அதில், “மருந்துகள் வெளியே தெரியும்படியான ஒரு பையில் வைக்கப்பட்டு சீல் வைத்து இருக்கவேண்டும். ஒரு உரிமம் பெற்ற மருத்துவரின் மருந்துச்சீட்டில் மருத்துவ நிலை, எவ்வளவு மருந்து, மற்றும் விளக்கங்கள் குறிப்பிட்டு, அதன் நகல் எப்போதும் வைத்து இருக்க வேண்டும். யாரேனும் அதிகாரிகள் ஏசியன் கேம்சின் போது இன்சுலின் அல்லது நரம்பில் செலுத்தப்படும் மருந்துகள் பயன்படுத்த வேண்டியது இருந்தால், அங்கே இருக்கும் இந்திய ஒலிம்பிக் கவுன்சிலின் அலுவலகம் அல்லது மருந்தகத்தில் அந்த மருந்துகளை வைத்துக் கொள்ளவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் தங்கி இருந்த அறைகள் மற்றும் அதன் அருகே ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் சில வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விதிகளை ஒட்டி இந்த அறிவுறுத்தல் கடிதம் எழுதப்பட்டாலும், காமன்வெல்த் தொடரின் போது இந்திய வீரர்கள் மீது எழுப்பப்பட்ட இந்த தேவையற்ற குற்றச்சாட்டுகள், இந்த முறை நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இந்த முறை “ஊசிகள் இல்லா கொள்கை” என்ற புதிய விதியை அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதியின்படி, வீரர்கள் யாரேனும் ஊசிகள் மூலம் மருந்துகள் எடுத்துக் கொண்டால், மறுநாள் பகல் பொழுதுக்குள் “ஊசி பிரகடன படிவம்” (Injetcion Declaration Form) மூலம் ஊக்கமருந்து தடுப்பு கமிஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல, ஊசிகள் மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்துகளும் பாதுகாப்பான ஒரு மையத்தில் வைக்கப்படும். தகுந்த அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றே அதை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.







Story first published: Thursday, August 2, 2018, 8:34 [IST]
Other articles published on Aug 2, 2018
English summary
Indian Olympic Council instructs strict guidelines for using injections and medicines during Asian games for Indian contingent.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X