For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமே அடம் பிடிக்க மாட்டோம்.. பணிந்த ஜப்பான்.. ஒலிம்பிக் தொடரில் வரும் மாற்றம்.. கசிந்த தகவல்!

டோக்கியோ : 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்க வாய்ப்பே இல்லை என ஜப்பான் அரசு சாதித்து வரும் நிலையில், அதற்கு மாறாக திட்டங்கள் நடைபெற்று வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. அந்த தொடர் ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஜப்பான் பல பில்லியன் டாலர் செலவு செய்து ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது.

ஜப்பான் சமாளிப்பு

ஜப்பான் சமாளிப்பு

முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஜப்பான் அரசு. ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என கூறி வந்தது. கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்த நிலையிலும், ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிப் போடுவதை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை என்றே கூறி வருகிறது.

தள்ளிப் போடும் முடிவு

தள்ளிப் போடும் முடிவு

இந்த நிலையில், ஒலிம்பிக் நிர்வாக கமிட்டியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஒலிம்பிக் தொடரை தள்ளிப் போடுவதை பற்றி இப்போது தான் ஜப்பான் அரசு பேசத் துவங்கி உள்ளது என ரகசியத்தை உடைத்துள்ளனர். இது தான் நடக்கும் என முன்பே தெரிந்திருந்தாலும், ஜப்பான் இதை மூடி மறைத்து வருகிறது.

செலவு

செலவு

பல்வேறு காலகட்டங்களுக்கு ஒலிம்பிக் தொடரை தள்ளி வைப்பது குறித்த திட்டங்களை ஜப்பான் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு கடும் செலவு ஆகும் என்பதால் அதையும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த முடிவாக இருந்தாலும் ஜப்பான் விரைவாக எடுக்க வேண்டும்.

12 பில்லியன் டாலர்

12 பில்லியன் டாலர்

காரணம், இதுவரை 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு விளம்பரதாரர்கள் ஒலிம்பிக் தொடருக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதே போல இதுவரை 12 பில்லியன் டாலர்கள் ஒலிம்பிக் தொடருக்காக செலவு செய்யப்பட்டுள்ளது ஜப்பான்.

விளையாட்டு வீரர்கள் அழுத்தம்

விளையாட்டு வீரர்கள் அழுத்தம்

ஆனால், தற்போது தொடரை ஆரம்பித்து பின் பாதியில் கொரோனா தாக்குதலால் நிறுத்துவதை விட, தொடரை தள்ளி வைப்பது நல்ல முடிவு. அதனால் ஜப்பான் அது குறித்து சிந்தித்து வருகிறது. மேலும், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தொடரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Story first published: Sunday, March 22, 2020, 16:29 [IST]
Other articles published on Mar 22, 2020
English summary
Japan looking for postponement of Tokyo Olympics 2020, after long denial of changing the plans for olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X