For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மோசமான நாடா? இந்த பக்கமே வராதீங்க.. வெளுத்த நெட்டிசன்கள்.. சரண்டரான F1 ரேஸ் வீரர் ஹாமில்டன்

Recommended Video

இந்தியா மோசமான நாடா? ஹாமில்டனை வெளுத்த நெட்டிசன்கள்

பெர்லின் : இந்தியா மோசமான நாடு என தன் பேச்சின் போது கூறிய எஃப்1 ரேஸ் ஓட்டுனர் ஹாமில்டன், இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஃபார்முலா ஒன் எனப்படும் எஃப்1 ரேஸ் விளையாட்டின் முன்னணி ஓட்டுனரான லெவிஸ் ஹாமில்டன் இந்தியா போன்ற மோசமான நாடுகளில் ஏன் ரேஸ் நடத்துகிறீர்கள்? என எஃப்1 ரேஸ் நடத்தும் நிர்வாகிகளை பற்றிய தன் விமர்சனத்தை முன் வைத்து இருந்தார்.

இது இந்திய ஊடகங்களில் தீயாக பரவியது. இந்தியர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிழி கிழியென கிழிக்கத் துவங்கினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹாமில்டன் மற்றும் அவரது ஸ்பான்சர் மெர்சிடஸ்-ஐ விளக்கம் அளிக்க வைத்துள்ளது.

இந்தியாவில் முரண்பாடு

இந்தியாவில் முரண்பாடு

பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஹாமில்டன், "இந்தியா போன்ற மோசமான நாடுகளில் எங்கேயும் இல்லாத ஒரு இடத்தில் பெரிய, அழகான ரேஸ் ட்ராக் அமைத்து இருக்கிறார்கள். அது முரண்பாடாக இருக்கிறது" என கூறி இருந்தார்.

கொதித்தெழுந்த இந்தியர்கள்

எராளமான நெட்டிசன்கள் ஹாமில்டனை வெளுத்து வாங்கினார்கள். அதில் ஒரு சோறு பதம் இங்கே. "உங்களுடைய முட்டாள்தனமான பேச்சுக்கு முன்பும் உன்களை எனக்கு பிடிக்காது. இப்போது அது இன்னும் குறைந்துள்ளது. நிச்சயம் இது போல சொல்வது நான் மட்டும் இல்லை என நினைக்கிறேன். உங்களுக்கு விளம்பரத்திற்காக இந்தியா வர எந்த பிரச்சனையுமில்லை, ஆனால், இங்கே ரேஸ் ஓட்ட மட்டும் வர மாட்டீர்கள். மீண்டும் வந்து விடாதீர்கள். உங்கள் முகத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை" என காட்டமாக கூறி இருக்கிறார் இந்த ரேஸ் ரசிகர்.

மெர்சிடஸ் நிறுவனம் விளக்கம்

இது போன்ற விமர்சனங்கள் அதிகரித்ததை பார்த்த மெர்சிடஸ் நிறுவனம் தங்கள் விளம்பர தூதரை காப்பாற்றும் நோக்கில், "அவர் பணக்கார எஃப் 1 ரேஸ், ஏழைகள் இருக்கும் இந்தியாவில் நடக்கிறேதே என பாவப்பட்டு தான் கூறினார். விமர்சிக்கவில்லை" என கூறி சமாளித்தது.

ஹாமில்டன் விளக்கம் அளித்தார்

ஹாமில்டன் விளக்கம் அளித்தார்

கடைசியாக சம்பந்தப்பட்ட ஹாமில்டன் இந்த விவகாரம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார். அதன் சுருக்கம் இங்கே. "இந்தியா அழகான நாடு. பொருளாதரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், அங்கே இன்னும் ஏழ்மை இருக்கிறது. வீடில்லாத மக்களை கடந்து, பணம் என்பது பிரச்சனையே இல்லாத மிகப் பெரிய மைதானத்துக்கு சென்று கிராண்ட் பிரிக்ஸ் நடத்துவது எனக்கு விசித்திரமாக இருக்கிறது"

பள்ளிகள் மற்றும் வீடுகள் கட்டலாமே

பள்ளிகள் மற்றும் வீடுகள் கட்டலாமே

"பல நூறு கோடிகளை இப்போது பயன்பாட்டிலேயே இல்லாத ரேஸ் ட்ராக்கில் முதலீடு செய்ததற்கு பதிலாக பள்ளிகள் மற்றும் வீடுகள் கட்ட அதை பயன்படுத்தி இருக்கலாமே. அங்கே ரேஸ் நடத்திய போது யாரும் வரவில்லை. ஏனெனில், அங்கே இந்த ரேஸ்-க்கு மிக அதிக செலவாகும் ஒரு விஷயம் அல்லது இதில் அதிகம் ஈடுபாடு இல்லை" என கூறி இருந்தார் ஹாமில்டன்.

நியாயம் தான்

நியாயம் தான்

ஹாமில்டன் கூறும் விளக்கம் நியாயமாகவே இருக்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் வீடு, கல்வி, வேலை என்பன போன்ற திட்டங்கள் வெற்றியை எட்டாத நிலையில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஒரு ரேஸ் ட்ராக்கிற்கு பல நூறு கோடிகள் செலவு செய்தது ஏன்?

இத்தாலி, ஜெர்மனில F1 ரேஸ் நடத்துங்க.. இந்தியா மாதிரி மோசமான இடத்துல ஏன் நடத்துறீங்க?

Story first published: Friday, November 16, 2018, 16:05 [IST]
Other articles published on Nov 16, 2018
English summary
Lewis Hamilton fallback and explain his comment on F1 race in “Poor India”
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X