For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என நினைக்கவே இல்லை.. தோல்விக்கு பின்.. கோல்ப் அதிதி உருக்கமான பேச்சு

டோக்கியோ: கோல்ப் போட்டி ஒன்றை மக்கள் இவ்வளவு ஆர்வமாக ஆதரிப்பார்கள் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் தெரிவித்துள்ளார்.

இன்று டோக்கியோ ஒலிம்பிக் கோல்ப் ஆட்டத்தில் கடைசி ரவுண்டில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். கடைசி ரவுண்டில் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை இவர் இழந்தார். கடைசி சுற்றில் சொதப்பிய அதிதி 68 புள்ளிகள் பெற்றார்.

இதனால் மொத்தமாக 269 புள்ளிகள் மற்றும் நெகட்டிவ் பார் பாயிண்ட் 15 பெற்ற அதிதி ரேங்க் பட்டியலில் 4வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட இந்தியாவில் கோல்ப் என்ற போட்டிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அதிதி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

ஒலிம்பிக் கோல்ப்.. பெண்கள் ஆட்டத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியாவின் அதிதி.. தோல்வி ஒலிம்பிக் கோல்ப்.. பெண்கள் ஆட்டத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியாவின் அதிதி.. தோல்வி

கோல்ப்

கோல்ப்

கோல்ப் போன்ற விளையாட்டுகளை இந்தியர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற வரலாற்றை மாற்றி, காலை 4 மணிக்கே பலரையும் கண் விழித்து போட்டிகளை பார்க்க வைத்துள்ளார். கண்டிப்பாக அதிதியின் இந்த ஆட்டத்திற்கு பின் இந்தியாவில் கோல்ப் ஆட்டம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மக்கள் பலரும் கோல்ப் மீது கவனம் திரும்ப இது வழி ஏற்படுத்தும்.

ஸ்போர்ட்ஸ்

ஸ்போர்ட்ஸ்

பணக்காரர்களின் ஆட்டம் என்ற நிலை மாறி, ஸ்போர்ட்ஸ் என்ற வகையில் எல்லோரும் இந்த போட்டியை அணுகும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பின் பேட்டி அளித்த அதிதி, நான் நான்காம் இடம் பிடித்தது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இதுவே வேறு தொடர் என்றால் நான் உண்மையில் சந்தோசமாக இருந்திருப்பேன்.

கஷ்டம்

கஷ்டம்

ஆனால் ஒலிம்பிக்கில் 4ம் இடம் பிடித்தது கஷ்டமாக இருக்கிறது. நான் சிறப்பாக ஆடினேன். என்னுடைய முழு திறமையை, முயற்சிகளை களத்தில் காட்டினேன். முதலில் கொஞ்சம் ஆட்டம் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி சுற்றுகளில் கொஞ்சம் கூடுதல் ஸ்டிரோக்குகளை எடுத்துக்கொண்டதாக நினைக்கிறேன். இன்று நடந்தது துரதிஷ்டவசமானது.

கீழே சென்றேன்

கீழே சென்றேன்

புள்ளிகள் பட்டியலில் கீழே இறங்கிவிட்டேன். நான் பதக்கம் வாங்கி இருக்கலாம் என்று விரும்புகிறேன். இருந்தாலும் என்னுடைய ஆட்டத்தை பார்த்து பலரும் மகிழ்ந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மக்கள் என்னுடைய ஆட்டத்தை டிவியில் ஆர்வமாக பார்ப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

ஆர்வம்

ஆர்வம்

மக்கள் ஆர்வமாக இப்படி கோல்ப் போட்டி ஒன்றை ஆதரிப்பார்கள் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இது கோல்ப் மீதான மக்களின் ஆர்வத்தை, விருப்பத்தை வரும் நாட்களில் அதிகரிக்க உதவும். குழந்தைகள் கோல்ப் ஆட்டத்தை நோக்கி கவனம் செலுத்த என்னுடைய போட்டி ஒரு வகையில் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன், என்று அதிதி அசோக் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, August 7, 2021, 18:43 [IST]
Other articles published on Aug 7, 2021
English summary
Olympics 2020 Athletics: It is happy to get so many people support says Golf star Aditi after losing in women individual match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X