For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகம் முழுக்க காயம்.. 7 இடங்களில் தையல்.. போட்டிக்கு முன் இந்திய பாக்ஸர் சதிஷுக்கு மெடிக்கல் டெஸ்ட்!

டோக்கியோ: ஆண்கள் பாக்சிங் +91 கிலோவில் இந்தியாவின் சதிஷ் குமார் இன்று காலிறுதி சுற்றில் ஆட உள்ள நிலையில், அவருக்கு திடீரென மெடிக்கல் சோதனை செய்யப்பட்டது.

ஆண்கள் பாக்சிங் +91 கிலோ பிரிவில் இன்று 1/16 குழு ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறுபவர்கள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இன்று இந்த போட்டியில் இந்தியா சார்பாக சதிஷ் குமார் யாதவ் கலந்து கொள்கிறார்.

ஒலிம்பிக் 2020.. ஆண்கள் பாக்சிங் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி.. வெளியேற்றம் ஒலிம்பிக் 2020.. ஆண்கள் பாக்சிங் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி.. வெளியேற்றம்

உலகின் நம்பர் ஒன் வீரரான உஸ்பெக்கிஸ்தானை சேர்த்த பகோதீர் ஜலாலாவை சதிஷ் குமார் எதிர்கொள்கிறார்.

முந்தைய ஆட்டம்

முந்தைய ஆட்டம்

இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி சதிஷ் வெற்றிபெற்றார். ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார். இதன் மூலம் சதிஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதில் சிறப்பாக ஆடினாலும் சதிஷ் முகத்தில் பலமான காயங்கள் ஏற்பட்டது.

இந்தியா

இந்தியா

ஜமைக்கா வீரர் கொடுத்த சில குத்துகளில் சதிஷ் முகத்தில் சில பகுதிகள் கிழிந்தன. முக்கியமான கன்னத்தில் சில இடங்களில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. சதிஷ் குமார் மற்றும் ரிக்கார்டோ பிரவுன் இடையிலான ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது.

வெற்றி

வெற்றி

முதல் சுற்றில் அனைத்து 5 ஜட்ஜ்களிடம் இருந்தும் சதிஷ் குமார் தலா 10 புள்ளிகளை பெற்றார். இரண்டாவது சுற்றில் 4 ஜட்ஜ்களிடம் இருந்து தலா 10 புள்ளிகளை பெற்றார். மூன்றாவது சுற்றிலும் 4 ஜட்ஜ்களிடம் இருந்து தலா 10 புள்ளிகளை பெற்றார். மொத்தமாக ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார்.

காலிறுதி

காலிறுதி

இதன் மூலம் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரின் முகத்தில் நிறைய இடங்களில் காயம் இருந்ததால் 7 தையல் போடப்பட்டது. முகத்தில் மட்டும் கன்னம், நெற்றி. உதடு அருகே தையல் போடப்பட்டது. இதனால் இன்று ஒலிம்பிக் கமிட்டியினர் சதிஷ் உடலை சோதனை செய்தனர். அவருக்கு மெடிக்கல் சோதனை நடத்தப்பட்டது.

மெடிக்கல்

மெடிக்கல்

இதில் கன்னத்தில் அவருக்கு பெரிய தையல் ஒன்றும் இருந்தது. இதனால் சதிஷ் சரியாக ஆட கூடிய நிலைமையில் இருக்கிறாரா என்று சோதனை செய்யப்பட்டது. முகத்தில் தையல் இருந்தாலும் அவர் பிட்டாக, ஆடும் நிலைமைக்குயில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் இன்று அவரின் பாக்சிங்கில் எந்த தடையும் இல்லாமல் ஆட முடியும்.

Story first published: Sunday, August 1, 2021, 13:17 [IST]
Other articles published on Aug 1, 2021
English summary
Olympics 2020 Boxing: India's Satish Kumar medically cleared for Quarterfinal games after 7 stiches .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X