For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"நடுவர் மீதே தாக்குதல்".. இந்திய வீரர் தீபக் புனியாவின் பயிற்சியாளர்.. ஒலிம்பிக்கில் இருந்து நீக்கம்

டோக்கியோ: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியாவின் பயிற்சியாளர் முராத் கைட்ராவ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நடத்தை விதிகளை மீறியதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Bajrang Punia wins bronze in 65kg wrestling! Tokyo Olympics | OneIndia Tamil

மல்யுத்த வீரர் தீபக் புனியா இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் 86 கிலோ எடை பிரிவு ஆட்டத்தில் கலந்து கொண்டார். இவர் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் அர்ஜென்டினாவில் மைலஸ் அமினேவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆட்டம் தீபக் புனியா கட்டுப்பாட்டில்தான் இருந்தது. முதல் இரண்டு புள்ளிகளை எளிதாக எடுத்து தீபக் முன்னிலை வகித்தார்.

கடைசி வரை போராட்டம்.. ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிப்போட்டி.. இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி! கடைசி வரை போராட்டம்.. ஆடவர் மல்யுத்தம் அரையிறுதிப்போட்டி.. இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி!

ஆனால் மோசம்

ஆனால் மோசம்

ஆனால் கடைசி 30 நொடிகளில் ஆட்டம் மாறியது. இதில் வரிசையாக மைலஸ் புள்ளிகளை பெற்றார். தொடர் புள்ளிகள் காரணமாக 2:4 என்ற புள்ளி கணக்கில் தீபக் புனியா, வெண்கலம் வாங்காமல் தோல்வி அடைந்தார். கடைசி நேரத்தில் நடுவர்கள் மைலஸுக்கு புள்ளிகள் கொடுத்த காரணத்தால் தீபக் புனியா தோல்வி அடைந்தார்.

தோல்வி காரணம்

தோல்வி காரணம்

இந்த தோல்விக்கு பின் புனியாவின் வெளிநாட்டு பயிற்சியாளர் முராத் கைட்ராவ் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். புனியாவிற்கு எதிராக எப்படி புள்ளிகள் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி கடுமையான வாக்கு வாதத்தில் முராத் கைட்ராவ் ஈடுபட்டார். இதில் நடுவர்களை முராத் கைட்ராவ் அடித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

நடுவர்களை முராத் கைட்ராவ் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீடியோக்களும் சோதனை செய்யப்பட்டது. முடிவில் முராத் கைட்ராவ் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். கிராமத்தில் இருந்து மொத்தமாக இவர் வெளியே அனுப்பப்பட்டார்.

நடவடிக்கை

நடவடிக்கை

விசாரணை முடிவில் இவர் ஒழுங்கீனமாக நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த செயல் காரணமாக தற்போது இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் இவர் மீது கோபத்தில் உள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் உடனடியாக இவர் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார்.

 சில மாதம்

சில மாதம்

கடந்த சில மாதங்களாக முராத் கைட்ராவ் இந்திய வீரர் தீபக் புனியாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். 2004 ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரராக இருந்தே போதே இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த தொடரில் இவர் எதிரணி வீரரை போட்டிக்கு பின் தாக்கிய காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 7, 2021, 12:48 [IST]
Other articles published on Aug 7, 2021
English summary
Olympics 2020: Indian wrestler Deepak Punia coach removed from Tokyo for attacking judges.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X