For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 கொரோனா.. மொத்த ஆஸி. தடகள குழுவும் தனிமைப்படுத்தப்பட்டது.. எல்லோருக்கும் டெஸ்ட்

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரின் ஆஸ்திரேலியாவின் மொத்த தடகள குழுவும் தனிமைப்படுத்தப்பட்டது. கொரோனா சோதனை எடுக்க வேண்டும் என்பதால் மொத்த குழுவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் டோக்கியோவில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக டோக்கியோவில் 3,000 கேஸ்கள் பதிவானது. சமீபத்தில் டோக்கியோவில் பதிவான மிக அதிக கேஸ் இதுதான்.

Olympics: Entire Australian Track and Field team in isolation as a precautionary measure

அதோடு ஒலிம்பிக் கிராமத்திலும் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை ஒலிம்பிக் 2020 தொடரில் அமெரிக்கா, சிலி, செக் குடியரசு, சிலி, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டச் ஆகிய நாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர் குழுவினர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் நேற்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அமெரிக்க பளு தூக்குதல் வீரர் கெண்ட்ரிக்ஸ் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் 2020 தொடரின் ஆஸ்திரேலியாவின் மொத்த தடகள குழுவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சோதனை எடுக்க வேண்டும் என்பதால் மொத்த குழுவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர் கெண்ட்ரிக்ஸ் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸி. குழு தனிமைப்படுத்தப்பட்டது.

ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை! ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை!

அமெரிக்க வீரருடன் சில போட்டிகளில் கலந்து கொண்டதால் மொத்தமாக ஆஸி. குழுவிற்கு டெஸ்ட் எடுக்க வேண்டும். அதோடு நாளை தடகள போட்டிகள் தொடங்க உள்ளதால் பாதுகாப்பு கருதி ஆஸி தரப்பு மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பல ஆஸி. தடகள வீரர், வீராங்கனைகள் தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ள நிலையில், இப்படி திடீரென மொத்த குழுவும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Thursday, July 29, 2021, 18:58 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Olympics: Entire Australian Track and Field team in isolation as a precautionary measure and will be tested today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X