For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8 மணி நேரத்தில் விற்று தீர்ந்து போன 2 லட்சம் ”ரியோ 2016” ஒலிம்பிக் டிக்கெட்டுகள்!

ரியோ டி ஜெனீரோ: பிரேசிலில் நடைபெற இருக்கின்ற 2016 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்று தீர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 2 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rio 2016 sell 240,000 tickets in eight hours

கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகின.

இதனையடுத்து மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனையில், முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 20 லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேசில் அல்லாதவர்களுக்கு தங்கள் நாட்டில் உள்ள மறு விற்பனையாளர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்க முடியும். தென் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் ம் தேதி நிறைவடைகிறது.

Story first published: Thursday, October 22, 2015, 10:24 [IST]
Other articles published on Oct 22, 2015
English summary
About 240,000 tickets were sold in the first eight hours of the latest Olympic ticketing phase, organizers said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X