For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொத்த இந்தியாவால் முடியாததை ஒத்த ஆளாக சாதிச்சிட்டாரே பெல்ப்ஸ்

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: 2008 முதல் இந்தியா இதுவரை ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், 70 நிமிட இடைவெளியில் 2 தங்கங்களை வென்று சாதித்துள்ளார் மைக்கேல் பெல்ப்ஸ்.

அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் காட்டில் மெடல் மழை. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற, ஆடவர் பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவில் தங்கம் வென்ற பெல்ப்ஸ், அடுத்ததாக அமெரிக்க ஆடவர் அமிக்காக 4x200 ரிலே பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றார்.

இரு போட்டிகளுக்கும் நடுவேயான இடைவெளி என்னவோ 70 நிமிடங்கள்தான். ஆனால், 20 மற்றும் 21வது தங்க பதக்கங்களை அடுத்தடுத்து வென்றார் பெல்ஸ்.

இவரது சாதனையை பார்த்து டிவிட்டரில் புகழாரம் சூட்டுகிறார்கள் ரசிகர்கள்.

தழும்பு

பெல்ப்ஸ் உடலிலுள்ள வட்ட வடிவ தழும்புகளை சுட்டி காட்டும் ஒரு டிவிட், அவர் பதக்கங்கள் மீது படுத்து தூங்குவதுதான் இதற்கு காரணம் என சொல்கிறது.

குறியில் இலக்கு

பெல்ப்ஸ் தனது குறியை இலக்கு கொண்டு நீந்துவதையும், சக போட்டியாளர் பெல்ப்சை பார்ப்பதையும் ஒப்பிடுகிறது இந்த டிவிட்.

இதே வேலையா போச்சு

காலையில் எழுந்திருப்பது, நீச்சல் குளத்தில் குதிப்பது, தங்கம் வெல்வது, தூங்குவது திரும்பவும் வழக்கம்போல செய்வது.. என்பதே பெல்ப்ஸ் ரொட்டின் வாழ்க்கை போல என புகழ்கிறது இந்த இந்த டிவிட்.

காத்திருந்து, காத்திருந்து..

பெல்ப்ஸ் 1 மணி நேரத்தில் 2 தங்க பதக்கங்களை வாங்குகிறார். ஆனால் மொத்த இந்தியாவோ, தனி நபர் பிரிவில் 1 தங்கம் வெல்ல 2008ல் இருந்து காத்துக்கொண்டிருக்கிறது என்று கேலி செய்கிறது இந்த டிவிட்.

Story first published: Wednesday, August 10, 2016, 13:02 [IST]
Other articles published on Aug 10, 2016
English summary
Michael Phelps, the most decorated Olympian in the history entered the record books twice in a day as he bagged two consecutive gold medals within a span of 70 minutes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X