For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் தடகளத்தில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தடகளப் போட்டியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பீஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றது இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Rio Olympics: Usain Bolt eases into 100m semi-finals

ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்திற்கான தகுதிச்சுற்றுப் போட்டி 8 ஹீட்டாக (பிரிவு) நடைபெற்றது. ஒவ்வொரு ஹீ்ட்டிலும் தலா 9 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.

7-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த உசைன் போல்ட் பந்தய தூரத்தை 10.07 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். பஹ்ரைன் வீரர் அன்ட்ரீவ் பிஷெர் 10.12 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்திற்கான அரையிறுதிப் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Sunday, August 14, 2016, 3:25 [IST]
Other articles published on Aug 14, 2016
English summary

 Two-time reigning sprint champion Usain Bolt won his qualifying heat in the men's 100 metres easily at the Rio Olympics here on Saturday (August 13).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X