சானியா மிர்சாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்... எதற்காக தெரியுமா?

Posted By:
Sania mirza expects her first baby

டெல்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அவருடைய கணவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதையடுத்து அவர்களுக்கு தொடர்ந்து பாராட்டு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக், 2010ல் திருமணம் செய்தனர்.

31 வயதாகும் சானியா மிர்சா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தங்களுடைய குழந்தையின் பெயருடன் மிர்சா மாலிக் என்ற துணைப் பெயர் வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

மேலும் பெண் குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். அப்போதே, சானியாவுக்கு முதல் குழந்தை பிறக்கப் போகிறது என்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூகதளத்தில், சானியாவும் சோயப் மாலிக்கும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் வீட்டில் துணிகள் வைக்கும் அலமாரியில் ஒன்றுக்கு மிர்சா என்றும் மற்றொன்றுக்கு மாலிக் என்றும், அதற்கு நடுவில் மிர்சா மாலிக் என்ற பெயரும் உள்ளது.

அதைத் தொடர்ந்து, சானியா மற்றும் மாலிக்குக்கு சமூகதளங்களில் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

English summary
Tennis player Sania Mirza expects her first baby.
Story first published: Monday, April 23, 2018, 19:25 [IST]
Other articles published on Apr 23, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற