பங்கேற்ற இரண்டு சர்வதேச போட்டிகளிலும் தங்கம்…. அசத்தும் பிளஸ் 1 மாணவி

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: அறிமுக சர்வதேசப் போட்டி, அதுவும் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற, பிளஸ் 1 மாணவி மனு பாகர், இரண்டாவது போட்டியிலும் தங்கம் வென்றார்.

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை போட்டிகள், மெக்சிகோவில் நடந்து வருகிறது.

Double gold for Manu Bhaker

இதில், மிகவும் குறைந்த வயதில் பங்கேற்றுள்ள, 16 வயதாகும், பிளஸ் 1 மாணவி, மனு பாகர், தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தினார்.

முதல் முறையாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் பாகர், உலகக் கோப்பை போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 237.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நேற்று கலப்பு இரட்டையர் பிரிவில் ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் இணைந்து, 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் பங்கேற்றார்.

இதில் வென்று, தொடர்ந்து இரண்டு நாள்களில், இரண்டு தங்கம் வென்று அசத்தினார் ஹரியானாவைச் சேர்ந்த பாகர். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்தது. அதில் இரண்டு பாகர் வென்றது.

ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தியா 7 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்று நடந்த, 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் மெஹுலு கோஷ் மற்றும் தீபக் குமார் ஜோடி வெண்கலம் வென்றது.

Story first published: Wednesday, March 7, 2018, 17:00 [IST]
Other articles published on Mar 7, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற