For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஏன் நோ பால் போடலை'... ஸ்ரீசாந்த்தை 'வண்டி வண்டி'யாக திட்டிய புக்கிகள்!

Sreesanth
சென்னை: ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரின் கடைசிப் பந்தில் நோ பால் போடாதது தொடர்பாக ஸ்ரீசாந்த்தை சூதாட்ட புக்கிகள் அசிங்கம் அசிங்கமாக திட்டிய கதை அம்பலத்திற்கு வந்துள்ளது.

மே 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியின்போது நடந்த பிக்ஸிங் தொடர்பாகவே இந்த வாய்ச்சண்டை நடந்ததாம்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளராக செயல்பட்ட ஸ்ரீசாந்த் சூதாட்ட புக்கிகளுக்கு சிக்னல் காட்டி விட்டு தனது 2வது ஓவரை வீசினார். அதில் அவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் இரண்டு ஓவர்கள் வீசிய ஸ்ரீசாந்த் 18 ரன்கள் கொடுத்தார்.

2வது ஓவரில் அவர்14 ரன்கள் விட்டுத் தர வேண்டும் என்பது புக்கிகள் பிறப்பித்த உத்தரவாகும். இருப்பினும் 13 ரன்கள்தான் கொடுத்தார் ஸ்ரீசாந்த். மேலும் அந்த ஓவரின் கடைசிப் பந்தை நோ பால் ஆக வீச வேண்டும் என்பதும் புக்கிகளின் உத்தரவாகும். ஆனால் நோ பால் போடவில்லை ஸ்ரீசாந்த்.

இதனால் புக்கிகள் ஆத்திரமடைந்தனர். இதுதொடர்பாக ஸ்ரீசாந்த்திடம் அவர்கள் சண்டைக்குப் போயுள்ளனர். அப்போது தான் நோ பால்தான் போட்டதாகவும், அதை நடுவர் கவனிக்கவில்லை என்றும் ஸ்ரீசாந்த் புக்கிகளிடம் வாதிட்டுள்ளார். ஆனால் அதை கேட்க மறுத்து விட்டனராம் புக்கிகள். மேலும், ஸ்ரீசாந்த்தை கெட்ட கெட்ட வார்த்தைகளால் மகா மோசமாகவும் திட்டினராம்.

மேலும் அவருக்கு பேசப்பட்ட ரூ. 40 லட்சம் பணத்தையும் தர முடியாது என கூறி நிறுத்தி வைத்தனராம். இதையடுத்து தனது நண்பரான ஜிஜு மூலமாக சமரசம் பேசி பணத்தைப் பெற்றாராம் ஸ்ரீசாந்த்.

அதன் பிறகு அவர், இனிமேல் பிக்ஸிங்கில் ஈடுபட ரூ. 80 லட்சம் தர வேண்டும் என்றும் ரேட்டை கூட்டி விட்டாராம். ஸ்ரீசாந்த் மற்றும் புக்கிகளுக்கு இடையிலான தொலைபேசிப் பேச்சு மூலம் இவை தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, May 23, 2013, 19:01 [IST]
Other articles published on May 23, 2013
English summary
Cricket bookies blasted Sreesanth in bad words after May 9 match for not bowling a no ball in his 2nd over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X