For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை மீண்டும் சேர்த்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

By Mayura Akilan
Indian Olympic Association delegates gear up for crucial IOC meeting in Lausanne
லாசென்: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சுவிட்சர்லந்தில் இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படவில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டது.

இந்த இடைநீக்கத்தால் 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்க முடியாத ஒரு நிலை உருவானது. மேலும் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில், இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் கூட இந்தியாவால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்சர்லந்தின் லாசென் நகரில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நியதிகளுக்கு உட்பட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புக்கொண்டது . இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஒப்புக்கொண்டது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிகளுக்கு உட்பட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் வரும் ஐந்தாம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 15, 2013, 17:37 [IST]
Other articles published on May 15, 2013
English summary
Top Indian Olympic Association delegates were busy giving finishing touches to their action plan as they geared up for the crucial meeting with the International Olympic Committee in Lausanne to draw a roadmap for India's return to the Olympic fold.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X