For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் முடிந்தது பாரா ஒலிம்பிக்ஸ்! பதக்க பட்டியலில் சீனா ஆதிக்கம்!

By Mathi
London Paralympics
லண்டன்: லண்டனில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சீனா 231 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்ததையடுத்து 14-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இப்போட்டிகளில் 164 நாடுகளில் 4,294 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 20 விளையாட்டுகளில் 503 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த ஒலிம்பிக்கில் சீனா 282 பேரை களமிறக்கியது.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் சீனா 95 தங்கங்களையும் 71 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 231 பதக்கங்களை பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

ரஷியா 36 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 34 தங்கம் உள்பட 120 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன. பிரதான ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா 31 தங்கம், 29 வெள்ளி, 38 வெண்கலம் என்று 98 பதக்கத்துடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தியா சார்பில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் கிரிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். வேறு யாருக்கும் பதக்கம் கிடைக்கவில்லை. பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய குழுவினர் நாளை காலை இந்தியா திரும்புகின்றனர்

Story first published: Monday, September 10, 2012, 11:05 [IST]
Other articles published on Sep 10, 2012
English summary
AND all of a sudden it was all over. The closing ceremony of the London Paralympics brought to an end not only a Games that had been proclaimed as one to change the Paralympic movement forever but also a spectacular sporting festival that began with the Olympic Games six weeks ago. The London Organising Committee (LOCOG) fulfilled its pledge to not treat the Paralympics as a poor cousin to the Olympics and the athletes themselves put on 11 days of not only enthralling sporting contests but inspiring stories.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X