For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அது என்ன ஸ்பாட் பிக்ஸிங்... ?

சென்னை: உலகையே ஒரு நேரத்தில் பெரும் பரபரப்பாக்கிய கிரிக்கெட் ஸ்பாட் பிக்ஸிங் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. இந்த முறை பிரபலமான கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியி்ல் முழ்கியுள்ளனர்.

முன்பு மேட்ச் பிக்ஸிங்தான் பிரபலமாக இருந்தது. இப்போது ஸ்பாட் பிக்ஸிங்தான் விளையாட்டு உலகில் பிரபலமாகியுள்ளது.

மேட்ச் பிக்ஸிங்கை விட இந்த ஸ்பாட் பிக்ஸிங் ரொம்ப ஈசியானது என்பதால்தான் இதை புக்கிகள் எனப்படும் போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் சூதாடிகள் விரும்புகிறார்கள்.

மேட்ச் பிக்ஸிங் என்றால் என்ன

மேட்ச் பிக்ஸிங் என்றால் என்ன

மேட்ச் பிக்ஸிங் என்பது ஒரு போட்டியையே மொத்தமாக தங்களது விருப்பத்திற்கு ஆதரவாக திருப்புவது. இதற்கு நிறைய செலவாகும் என்பதோடு அத்தனை முக்கிய வீரர்களும் உடன்பட வேண்டும் என்பதும் அடங்கும்.

ஸ்பாட் பிக்ஸிங் என்றால்...

ஸ்பாட் பிக்ஸிங் என்றால்...

ஸ்பாட் பிக்ஸிங் என்பது ஒரு சில விஷயங்களை மட்டும் தங்களுக்கு சாதகமாக செய்ய வைப்பதாகும். அதாவது குறிப்பிட்ட ஒருவரில் ஒரு நோ பால் அல்லது வைட் போன்றவற்றை வீசச் செய்வது. இதற்காக அந்தக் குறிப்பிட்ட பவுலருக்கு மட்டும் பணம் போகும்.

பேட்ஸ்மேனையும் விலைக்கு வாங்கலாம்

பேட்ஸ்மேனையும் விலைக்கு வாங்கலாம்

அதேபோல குறிப்பிட்ட முக்கியமான பேட்ஸ்மேனையும் ஸ்பாட் பிக்ஸிங்குக்கு இழுத்து அவரையும் சாதகமாக மாற்றுகிறார்கள். குறிப்பிட்ட பேட்ஸ்மேனிடம் வழக்கம் போல விளையாடாமல் மாற்றி விளையாடுமாறும், கேட்ச் ஆவது போல பந்தை அடிக்குமாறும் கேட்டுக் கொள்வார்கள்.

செலவு குறைய.. லாபம் அதிகம்

செலவு குறைய.. லாபம் அதிகம்

இப்படிப்பட்ட குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பிக்ஸ் செய்வதன் மூலம் அத்தனை பேருக்கும காசு தர வேண்டிய அவசியம் கிடையாது. அதேசமயம், தாங்கள் நினைப்பதையும் சாதிக்க முடியும் என்பதால் இப்போதெல்லாம் இதைத்தான் புக்கிகள் விரும்புகிறார்கள்.

கிரிக்கெட்டில் மட்டுமா...

கிரிக்கெட்டில் மட்டுமா...

கிரிக்கெட்டில் மட்டும்தான் இந்த ஸ்பாட் பிக்ஸிங் இருக்கிறதா என்றால் இல்லை. கால்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கூட இதைச் செய்கிறார்கள். ஹாக்கியிலும் கூட செய்கிறார்களாம்.

கண்டுபிடிப்பது கஷ்டம்

கண்டுபிடிப்பது கஷ்டம்

மேட்ச் பிக்ஸிங்ஸில் ரிஸ்க் நிறைய. யாராவது ஒரு வீரர் பின்னாளில் போட்டுக் கொடுத்து விட்டால் அத்தனை பேரும் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஸ்பாட் பிக்ஸிங்கில் சில வீரர்களே ஈடுபடுவதால் சிக்கும் ரிஸ்க் குறைவுதான். ஸ்ரீசாந்த் மாதிரி எப்போதாவது சிக்கிக் கொண்டால் உண்டு.

Story first published: Thursday, May 16, 2013, 11:17 [IST]
Other articles published on May 16, 2013
English summary
Spot fixing is an illegal practice in a sport where a specific part of a game is fixed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X