For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனது ஆச்சு.. வாங்க உடம்பை ஃபிட்டா வச்சுக்குவோம்.. சீனாவில் தாத்தா பாட்டிகள் ரொம்ப பிசி

யின்சுவான்: கொரோனாவைரஸை ஊர் பூராவும் கிளப்பி விட்டு விட்டு தற்போது தனது நார்மலான வேலைகளில் இறங்கியிருக்கும் சீனாவில் தற்போது வயதானவர்கள் மீண்டும் தாய் சி தற்காப்புக் கலை பயிற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளனராம்.

சீனாவிலிருந்துதான் கிளம்பியது கொரோனாவைரஸ். அங்கு கிளம்பிய வைரஸ்தான் இன்று உலகையே உலுக்கி எடுத்து வருகிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேல் அநியாயமாக இறந்து விட்டனர். இந்தியாவும் இந்த வைரஸிடம் சிக்கி இப்போது தவித்து வருகிறது.

வைரஸ் வந்தாலும் வந்தது உலகில் எல்லாத் துறையுமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. மக்களும் கூட பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சீனாவில் மீண்டும் தாய் சி கலையை மக்கள் கையில் எடுத்துள்ளனர்.

சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனாவைரஸ்

சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனாவைரஸ்

சீனாவில் தற்போது கொரோனாவைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்டதால், அங்கு வயதானவர்களுக்கு உடம்பை நன்றாக வைத்துக் கொள்வது தொடர்பான உடற்பயிற்சிகள் தரப்படுவது துவங்கியுள்ளது. இதற்காக அங்கு தாய் சி என்ற தற்காப்புக் கலை பயன்படுகிறது. இது உடலை நன்றாக வைத்துக் கொள்வதற்கான கலையாகும். கிட்டத்தட்ட குங்பூ போன்றது.

கை கொடுக்கம் தாய் சி

கை கொடுக்கம் தாய் சி

இந்த தாய் சி பயிற்சியில் வயதானவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். 70 வயது உடையவர்களும் கூட இதைச் செய்கின்றனர். இதுகுறித்து 70 வயதான கியூ சுயுயாங் என்பவர் கூறுகையில், நாங்கள் இத்தனை நாட்களாக இதை மிஸ் செய்தோம். இப்போது மீண்டும் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் தாய் சி செய்ய ஆரம்பித்துள்ளோம் என்றார்.

வீசேட் மூலம் பேச்சு

வீசேட் மூலம் பேச்சு

சமூக தனித்திருத்தல் சமயத்தின்போது நாங்கள் வீசேட் மூலமாகத்தான் பேசிக் கொள்ள முடிந்தது. பலரையும் அதில்தான் பிடிக்க முடிந்தது. பலர் இந்த ஊரை விட்டு போய் விட்டனர். சிலர் மட்டுமே உள்ளனர். இருப்பவர்களை வைத்து மீண்டும் தாய் சியை ஆரம்பித்து விட்டோம் என்றார். இவரது நண்பர் ஒருவருக்கு 80 வயதாகிறதாம். அவர் கடந்த 40 வருடமாக தாய் சி செய்து வருகிறாராம்.

பெரிய பூங்காவில் தாய் சி

பெரிய பூங்காவில் தாய் சி

யின்சுவான் நகரில் உள்ள மிகப் பெரிய பூங்கா ஸோங்ஷான் பூங்கா. அங்குதான் பலரும் தாய் சி செய்கின்றனர். இந்த பூஙகாவில் உள்ள ஸ்கொயர் டான்சிங், ரோலர் ஸ்கேட்டிங் பகுதிகள் மார்ச் மாத கடைசியிலிருந்தே பிசியாக ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல பலரும் உடற்பயிற்சிக்காக இந்த பூங்காவுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்

நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்

கியூ மேலும் கூறுகையில், நான் தனித்து வாழ்ந்து வருகிறேன். என்னைப் போலத்தான் பலரும் உள்ளனர். அனைவருமே நல்ல நண்பர்களாக உள்ளனர். இங்கு வந்துதான் பலர் நண்பர்களானோம். நிறையப் பேசுவோம். தாய் சி செய்வதால் உடல் மட்டுமல்ல மனசும் கூட நன்றாக இருக்கும். என்னை மேலும் பொலிவாக்கியதில் தாய் சிக்கு முக்கியப் பங்குண்டு என்று தெரிவித்தார்.

முதியவர்களுக்கு ஆறுதல்

முதியவர்களுக்கு ஆறுதல்

கொரோனாவைரஸால் முடங்கிப் போயிருந்த சீன மக்களுக்கு மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இருந்தாலும் இன்னும் கூட முன்னெச்சரிக்கையாகவே அவர்கள் உள்ளனராம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கலையையும் கூட அவர்கள் பொது இடங்களில் செய்து வருகின்றனராம். சீக்கிரம் நம்ம நாட்டிலும் இயல்பு நிலை திரும்பட்டும். கொரோனாவைரஸால் முடங்கிப் போயிருந்த சீன மக்களுக்கு மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இருந்தாலும் இன்னும் கூட முன்னெச்சரிக்கையாகவே அவர்கள் உள்ளனராம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கலையையும் கூட அவர்கள் பொது இடங்களில் செய்து வருகின்றனராம். சீக்கிரம் நம்ம நாட்டிலும் இயல்பு நிலை திரும்பட்டும்.

Story first published: Sunday, April 12, 2020, 12:07 [IST]
Other articles published on Apr 12, 2020
English summary
Chinese Martial art Thai Chi is becoming popular there again after the slow down of Coronavirus Pandemic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X