ஒலிம்பிக்கில் வீரர்களுக்கு கொரோனா வந்தால்..? அடக்கடவுளே.. அவ்வளவுதானா? பீதி கிளப்பும் ரூல்ஸ்

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்யப்படும் தெரியுமா?

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

IND vs SL 2nd ODI: வரலாற்றில் புதிய சாதனை.. இந்தியாவுக்கு வாய்ப்பு.. இலங்கைக்கு IND vs SL 2nd ODI: வரலாற்றில் புதிய சாதனை.. இந்தியாவுக்கு வாய்ப்பு.. இலங்கைக்கு

கொரோனா காரணமாக கடந்தாண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டிகள் தற்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகிறது.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

ஆனால், இங்கு சிக்கல் என்னவெனில், இப்போது டோக்கியோவில் போட்டிகள் நடைபெறும் கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்படத் தொடங்கியிருப்பது தான். இதனால், போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். போட்டியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிக மிக கவனமாக பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து டோக்கியோ வரும் வீரர்கள், விமான நிலையத்தில் இருந்து அனைத்து சோதனைகளையும் முடித்து வெளிவரவே 6 - 8 மணி நேர ஆகிவிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Did Not Start

Did Not Start

சரி.. ஒருவேளை போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் போட்டியாளர்களில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? அடுத்து என்ன நடக்கும்? வீரர்கள் அல்லது வீராங்கனைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். அதாவது அவர் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார், ஆனால் 'Did Not Start (DNS)' என்று பெயரிடப்படுவார்கள். போட்டியின் தன்மை மற்றும் நிலவரத்தை பொறுத்து வீரர் அல்லதுஒரு அணியின் 'குறைந்தபட்ச முடிவு' பாதுகாக்கப்படும். பொதுவான சில நடவடிக்கைகள் மட்டுமின்றி, சில விளையாட்டு தொடர்பான செயல்முறைகளும், நடவடிக்கைகளும் பின்பற்றப்படும்.

அடுத்த சுற்றுக்கு தகுதி

அடுத்த சுற்றுக்கு தகுதி

தடகள பிரிவில், ஒரு தடகள வீரருக்கு கொரோனா ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், அந்த வீரருக்கு அடுத்த 'சிறந்த இடத்தில்' இருக்கும் தடகள வீரர் அடுத்த சுற்றில் பாதிக்கப்பட்ட வீரர் இருந்த நிலையில் இருந்து தனது விளையாட தொடங்குவார். பேட்மிண்டனில், கோவிட் காரணமாக ஒரு ஷட்லர் பங்கேற்க முடியாவிட்டால், எதிர் போட்டியாளர் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடுவார்.

நாக் அவுட்

நாக் அவுட்

மல்யுத்த பிரிவில், யாராவது ஒரு மல்யுத்த வீரருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால், பேட்மிண்டன் விதிமுறைகள் தான் அவர்களுக்கும் பொருந்தும். எதிராளி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடுவார்.

ஒருவேளை அது இறுதிப் போட்டியாக அமையும் பட்சத்தில், அரை இறுதி சுற்றில் நாக் அவுட் செய்யப்பட்ட மற்றொரு வீரர் பாதிக்கப்பட்ட வீரருக்கு பதிலாக இறுதிப் போட்டியில் இடம்பெறுவார்.

Olympic Medalல் மறைந்திருக்கும் ரகசியம்! இதுதான் Design முறை | OneIndia Tamil
வெண்கல பதக்கம்

வெண்கல பதக்கம்

டென்னிஸ் மற்றும் குத்துச்சண்டையில், இறுதிப் போட்டியில் போட்டியாளருக்கு கொரோனா ஏற்பட்டால், எதிராளி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படுவார். பாதிக்கப்பட்ட வீரருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும். ரக்பி, ஹாக்கி அல்லது கால்பந்து போட்டிகளில், elimination ஆட்டங்கள் என்றால், கோவிட்-பாசிட்டிவ் ஆன அணியின் குறைந்தபட்ச தரவரிசை பாதுகாக்கப்படுகிறது. "ஒரு அணியில் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாவிட்டால், கோவிட் -19 பாதிப்புக்குள்ளான அணியால் வெளியேற்றப்பட்ட அணியாக இருப்பின், அந்த அணி இறுதிப் போட்டிக்கு கொண்டு வரப்படும். தோல்வியுற்ற மற்ற அரையிறுதி அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும்" என்று கொரோனா விதிமுறைகள் கூறுகின்றன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
What happens if athlete affects by Covid Olympic - ஒலிம்பிக்
Story first published: Tuesday, July 20, 2021, 13:23 [IST]
Other articles published on Jul 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X