For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட.. பழசையே பார்த்து பார்த்து சலிச்சுப் போச்சுப்பா.. டிரம்ப்புக்கு வந்த ஆசையைப் பாருங்க

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீக்கிரமே விளையாட்டுப் போட்டிகள் தொடங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம்.

உலக அளவில் அதிக அளவில் கொரோனாவைரஸுக்குப் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அங்கு பிற நாடுகளை விட அதிகமாக கொரோனா பரவியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் பல மாகாணங்கள் கொரோனாவிடம் சிக்கித் தவித்து வருகின்றன. குறிப்பாக நியூயார்க்கில்தான் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் ஒத்திவைப்பு.. திட்டம் இதுதான்.. பிசிசிஐ அதிரடி!அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் ஒத்திவைப்பு.. திட்டம் இதுதான்.. பிசிசிஐ அதிரடி!

விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

கொரோனோ அச்சம் காரணமாக அமெரிக்காவிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. அமெரிக்கர்கள் இப்படியெல்லாம் வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு இது முற்றிலும் கடினமான அனுபவம். இதைத்தான் டிரம்ப் தனது பேச்சில் உணர்த்தியுள்ளார். அதாவது விரைவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வெளியில் வர வேண்டும்

வெளியில் வர வேண்டும்

இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியின்போது அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. என்பிஏ, கால்பந்துப் போட்டிகள் என எல்லாமே தடைபட்டுள்ளன. விரைவில் இவையெல்லாம் மீண்டும் தொடங்க வேண்டும். மக்கள் வெளியில் வர வேண்டும். விளையாட்டுப் போட்டிகளை பார்த்து ரசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

போரடிக்கும் பழைய போட்டிகள்

நானும் கூட விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்து ரசிக்க காத்திருக்கிறேன். 14 வருடத்திற்கு முந்தைய பேஸ்பால் போட்டிகளைக் கண்டு போரடித்து விட்டது. விரைவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற வேண்டும், அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் டிரம்ப். டிரம்ப் போலவேதான் மற்ற அமெரிக்கர்களும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று ஆர்வமாக காத்துள்ளனர்.

உள்ளூரில் அதிருப்தி அதிகரிப்பு

உள்ளூரில் அதிருப்தி அதிகரிப்பு

ஆனால் உள்ளூரில் டிரம்ப் மீது அதிருப்திதான் அதிகரித்து வருகிறது. காரணம், கொரோனாவைரஸ் பரவலை முன்கூட்டியே தடுக்காமல் அதிபர் டிரம்ப் தவறி விட்டார். இதனால்தான் அமெரிக்கா பெரிய கஷ்டத்தை சந்திக்க வேண்டி வந்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் டிரம்ப் இதையெல்லாம் வழக்கம் போல தனக்கே உரிய ஸ்டைலான சிரிப்புடன் கடந்து சென்று விடுகிறார்.

Story first published: Wednesday, April 15, 2020, 16:15 [IST]
Other articles published on Apr 15, 2020
English summary
US president Donald Trump wants Sports activities are is back in USA
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X