For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வை வாபஸ் பெற்று அசிங்கப்பட நான் ரெடியா இல்லை.. போல்ட் அதிரடி

By Staff

லண்டன்: தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த, மின்னல் மனிதன் உசேன் போல்ட், தான் பங்கேற்ற கடைசி போட்டித் தொடரில், ஒரு வெண்கலம் மட்டுமே வென்றதுடன், கடைசி போட்டியில் தசைப்பிடிப்பால் காயமடைந்தார்.

11 முறை உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற, தொடர்ந்து, மூன்று ஒலிம்பிக் போட்டிகளில், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் என்று, எந்தப் போட்டியானாலும், தங்கத்தை குத்தகைக்கு எடுத்தவர், ஜமைக்காவின் உசேன் போல்ட்.

கடந்த, 10 ஆண்டுகளாக, தடகளப் போட்டிகளில் கோலோச்சி வந்த போல்ட், தனது ஓய்வை அறிவித்தார். இது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலக தடகளப் போட்டிகள்

உலக தடகளப் போட்டிகள்

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியுடன், ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 100 மீட்டர் ஓட்டத்தில், வெண்கலம் வென்றபோது, உலகமே அதிர்ந்தது. அவர் கடைசியாக பங்கேற்ற, 100 மீட்டர் தொடர் ஓட்டத்தின்போது, திடீரென தசைபிடிப்பு ஏற்பட்டு, மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

தன் சாதனையை தானே முறியடித்தவர்

தன் சாதனையை தானே முறியடித்தவர்

உலக சாதனைகளை முறியடித்ததுடன், அவற்றை மீண்டும் மீண்டும் தானே முறியடித்தவர் போல்ட். அவருடைய சாதனைகளை முறியடிக்க பல ஆண்டுகளாகலாம்.

ஏமாற்றம் இல்லை.. மாற்றமும் இல்லை

ஏமாற்றம் இல்லை.. மாற்றமும் இல்லை

கடைசி போட்டியில் தங்கம் வெல்லாததால், அவர் மீண்டும் களத்தில் இறங்குவாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், தனது முடிவில் மாற்றமில்லை என்று, போல்ட் உறுதியுடன் கூறியுள்ளார்.

அசிங்கப்பட விரும்பவில்லை

அசிங்கப்பட விரும்பவில்லை

"பலர் ஓய்வு பெற்றதை நான் பார்த்துள்ளேன். ஆனால், சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களில் மீண்டும் களத்தில் இறங்குவார்கள். ஆனால், அதுபோன்று செய்து, அசிங்கப்பட விரும்பவில்லை. ஓய்வு என்ற முடிவில் மாற்றமில்லை.

திருப்தியுடன் கிளம்புகிறேன்

திருப்தியுடன் கிளம்புகிறேன்

இந்த ஒரு போட்டியினால், நான் இதுவரை செய்தது மறைந்து விடப் போவதில்லை. முழு மனத் திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன். இதுதான், களத்தில் போட்டியாளராக நான் களமிறங்குவது கடைசி. ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் போல்ட்.

Story first published: Monday, August 14, 2017, 13:34 [IST]
Other articles published on Aug 14, 2017
English summary
The fastest man in the earth, Usain Bolt will return to the field again? But he responded in negative.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X