For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்... பளுதூக்கும் பிரிவில் மீராபாய் சானு வெற்றி!

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

By gajalakshmi

சிட்னி : ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் கோலாகலமாக நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. மகளிர் பளுதூக்கும் பிரிவில் இந்திய வீராங்கணை செய்கோம் மீராபாய் சானு வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 71 நாடுகளை சேர்ந்த 4,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

weightlifter Saikhom Mirabai Chanu received first gold medal for India at commonwealth games

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டி தொடக்கவிழாவின் போது அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி கம்பீரமாக நடந்து வந்தனர். இந்தியாவின் சார்பில் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி. சிந்து தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். இதனையடுத்து இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன.

இன்று போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் பளு தூக்கும் வீராங்கணை மீராபாய் சானு. மகளிர் பளு தூக்கும் பிரிவில் 48 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் மீராபாய் சானு. மொத்தம் 196கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு புதிய சாதனையை படைத்துள்ளார். 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடை பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் மீராபாய் சானு. இவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்.

இதே போன்று ஆடவருக்கான பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 56 கிலோ எடையை தூக்கி குருராஜா வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

Story first published: Thursday, April 5, 2018, 12:28 [IST]
Other articles published on Apr 5, 2018
English summary
weightlifter Saikhom Mirabai Chanu received first gold medal for India at commonwealth games, she lifted 48 Kilo and registered new record also in the history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X