கொரியாவில் கோலாகலமாக தொடங்கியது குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2018

By: Vishnupriya
தென்கொரியாவில் தொடங்கியது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்- வீடியோ

பியாங்சாங்: வடகொரியா தலைநகர் பியாங்சாங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2018 போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கின.

இந்த போட்டிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்காக பியாங்சாங் ஒலிம்பிக் மைதானத்தில் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டது.

Winter Olympics 2018: A united Korea lights up Pyeongchang's opening ceremony

இந்நிலையில் இந்த விழா இன்று தொடங்கியது. கண் கவர் அலங்கார விளக்குகள், 100-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களின் நடனம், போட்டியில் பங்கேற்கும் நாட்டினரின் பாரம்பரிய உடையில் அணிவகுப்பு என விழா கலைகட்டியது.

இந்த தொடக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார். இந்த விழாவில் வட மற்றும் தென்கொரியவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 92 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன. விழாவில் தென் கொரியா அதிபர் மூன் ஜே கலந்து கொண்டு அதிபரின் சகோதரியுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

இந்த போட்டிகளை காண 35 ஆயிரம் பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 9, 2018, 21:33 [IST]
Other articles published on Feb 9, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற