For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூசிலாந்து-ஸ்காட்லாந்து போட்டியில் தங்க முட்டை போட்ட வாத்துகள்.. இப்படியும் ஒரு சாதனை!

By Veera Kumar

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி மோசமான ஒரு உலக கோப்பை சாதனையை படைத்துள்ளனர்.

நியூசிலாந்து-ஸ்காட்லாந்து இடையே நடைபெற்ற இன்றைய உலக கோப்பை லீக் போட்டி பல வகைகளிலும் வித்தியாசமானது. குட்டி அணியான ஸ்காட்லாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில்தான் நியூசிலாந்து வென்றது. ஆனால் 151 பந்துகள் மிச்சமிருந்தன. இதுவும் ஒரு உலக சாதனைதான். இத்தனை பந்துகள் மிச்சமிருக்கும்போது, எந்த அணியுமே இவ்வளவு அதிக விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றதில்லை.

கங்குலி சொந்தக்காரர்களா?

கங்குலி சொந்தக்காரர்களா?

மற்றொரு பக்கம் ஸ்காட்லாந்து இன்னும் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். கிரிக்கெட்டில் இதை 'கோல்டன் டக்' என்று அழைப்பர். இந்தியாவின் கங்குலி இந்த வகையில் அவுட் ஆவதில் பெயர்பெற்றவர்.

இலங்கை, பாகிஸ்தானும் அப்படித்தான்

இலங்கை, பாகிஸ்தானும் அப்படித்தான்

ஆனால் ஒரு உலக கோப்பை போட்டியில் 4 பேட்ஸ்மேன்கள் முதல் பந்தில் டக் அவுட் ஆனது 1999ல் இலங்கைக்கும், 2003ல் பாகிஸ்தானுக்கும் நடந்துள்ளது. அந்த லிஸ்டில் ஸ்காட்லாந்தும் சென்று சேர்ந்துள்ளது.

யார், யாருடைய பந்தில்

யார், யாருடைய பந்தில்

தங்க முட்டை போட்டவர்கள் இவர்கள்தான்: கலம் மேக்லியோட் மற்றும் ஹமிஸ் கார்டினர் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சிலும், பிரெஸ்டன் மோம்சென், டிம் சவுத்தி பந்து வீச்சிலும், இயான் வார்ட்லா, டேனியல் வெட்டோரி பந்து வீச்சிலும் டக் அவுட் ஆனார்கள்.

சொல்லி வைத்தமாதிரி அவுட்

சொல்லி வைத்தமாதிரி அவுட்

இவர்கள் அனைவருமே, சொல்லி வைத்தது போல எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 17, 2015, 12:25 [IST]
Other articles published on Feb 17, 2015
English summary
After 5 consecutive scores of 300 plus (in first innings) in 3 days at the ICC World Cup 2015, the run deluge came to a halt at Dunedin's University Oval.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X