For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸி.க்கு எதிரான போட்டி: இங்கிலாந்து பவுலர் ஃபின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை! உலக கோப்பையில் 7வது வீரர்

By Veera Kumar

மெல்போர்ன்: நடப்பு உலக கோப்பையின் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை, போட்டித் தொடரின் முதல் நாளிலேயே நிகழ்த்தினார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின்.

உலக கோப்பை தொடரின் முதல் நாளான இன்று, இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்ன் நகர மைதானத்தில் பலப் பரிட்சை நடத்தின.

டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன், ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணியின் பின்ச் சதம் அடித்த நிலையில், இறுதியில் களமிறங்கிய மேக்ஸ்வெல், ஹாடின் ஆகியோரும் அதிரடி காண்பித்தனர்.

ஸ்டீவன் ஃபின் ஹாட்ரிக்

ஸ்டீவன் ஃபின் ஹாட்ரிக்

கடைசி ஓவரை வீச ஸ்டீவன் ஃபின் வரவழைக்கப்பட்டார். முதல் மூன்று பந்துகளும் ரன் எடுக்கப்பட்ட நிலையில், 4வது பந்தில் பிராடிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஹாடினும், 5வது பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் மேக்ஸ்வெலும், கடைசி பந்தில் ஜேம்ஸ் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல், ஜான்சனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

எனவே ஆட்டத்தின் கடைசி மூன்று பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஃபின். நடப்பு உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக் சாதனை, முதல் நாளிலேயே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து பவுலர் எடுத்த முதல் ஹாட்ரிக் இதுவாகும். மொத்தத்தில் இது 7வது ஹாட்ரிக் சாதனை.

சேத்தன் சர்மா

சேத்தன் சர்மா

முன்னதாக 1987ம் ஆண்டு உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நாக்பூரில் நடந்த போட்டியில், இந்தியாவின் சேத்தன் சர்மா ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

சக்லைன் முஷ்தாக்

சக்லைன் முஷ்தாக்

1999 உலக கோப்பையின்போது ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் ஸ்பின்னர் சக்லைன் முஷ்தாக் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமிந்தா வாஸ்

சமிந்தா வாஸ்

2003 உலக கோப்பையின்போது வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

பிரெட் லீ

பிரெட் லீ

2003 உலக கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ கென்யாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

மலிங்கா

மலிங்கா

2007 உலக கோப்பையின்போது, இலங்கையின் மலிங்கா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பொல்லாக், ஆன்ட்ரியூ ஹால், ஜேக் கல்லீஸ் ஆகியோர் இவரது பந்தில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

கடந்த உலக கோப்பையின்போது ஹாட்ரிக் சாதனை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 14, 2015, 13:20 [IST]
Other articles published on Feb 14, 2015
English summary
England fast bowler Steven Finn took the World Cup's seventh hat-trick on the inaugural day of the 2015 edition. He achieved the feat against hosts Australia in the final over of the match at the Melbourne Cricket Ground.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X