மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது... சாகர் ராணா கொலை வழக்கு.. டெல்லி போலிசார் அதிரடி!

டெல்லி: சாகர் ராணா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருர், கடந்த சில நாட்களாக கொலை வழக்கில் தலமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சுஷில் குமாரும், அவரின் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகராறு

தகராறு

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த மே 5-ம் தேதி, மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள், 23 வயது மல்யுத்த வீரரான சாகர் ராணாவை வீட்டிலிருந்து கடத்தி, டெல்லியிலுள்ள சத்ராஸல் மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.

 சண்டை

சண்டை

சத்ராஸல் மைதான கார் பார்க்கிங் பகுதியில் சாகர் ராணா மற்றும் சுஷில் குமார் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும், அவர்களின் நண்பர்களும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

தலைமறைவு

தலைமறைவு

படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் ராணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சுஷில் குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சுஷில் குமாரைத் தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனை அறிந்த சுஷில் குமார் ஒவ்வொரு மாநிலமாக தப்பி வருவதாக தப்பி தலைமறைவாக உள்ளதாகவும், அவரின் இருப்பிடம் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர்.

அதிரடி கைது

அதிரடி கைது

இந்நிலையில் இன்று சுஷில் குமார் மற்றும் அவரது உதவியாளர் அஜய்யை டெல்லி போலிசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் யாரையோ பார்ப்பதற்காக சென்ற போது சுற்றி வலைத்து பிடிக்கப்பட்டனர். சுஷில் குமார் கடந்த செவ்வாய் கிழமை டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Wrestler Sushil Kumar arrested by Delhi Police in murder case
Story first published: Sunday, May 23, 2021, 12:16 [IST]
Other articles published on May 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X