For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மனைவி டி.வி.யை உடைத்திருப்பார்.. ஆஸி. ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் கல..கல..!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வென்றார்.

Recommended Video

Nadal fights back to clinch the Australian Open and lift 21st Grand Slam title | OneIndia Tamil

இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் மேட்வடெவ் உடன் நடால் மோதினார்.

சுமார் 5 மணி நேரம் 24 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 2க்கு6, 6க்கு7, 6க்கு4, 6க்கு4, 7க்கு5 என்ற செட் கணக்கில் நடால் வென்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

டி.வியை உடைந்திருக்கும்

டி.வியை உடைந்திருக்கும்

தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய மேட்வடெவ், ரன்னர் அப்க்கான ஷில்டை வாங்கினார். அப்போது பேசிய அவர், எனக்காக ஆதரவு அளித்த என் அணியினருக்கு நன்றி. என் மனைவி இந்தப் போட்டியை பார்த்து இருந்தால், இந்நேரம் டி.வியை உடைத்திருப்பார்.

நடாலுக்கு பாராட்டு

நடாலுக்கு பாராட்டு

இவ்வளவு இரவு நேராமி விட்டது, இருப்பினும் என் தாய் தந்தை இந்த போட்டியை பார்த்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் கடுமையாக முயற்சித்தேன், ஆனால் நடால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய மக்களுக்கும் என் நன்றிகள். அடுத்த ஆண்டும் இங்கு வருவேன் என்று கூறினார்.

கடுமையான காலம்

கடுமையான காலம்

சாதனை படைத்த பிறகு பேசிய நடால், ஒன்றரை மாதத்திற்கு முன் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியுமா என்று நினைத்தேன். ஆனால், இப்போது உங்கள் முன் சாம்பியன் பட்டத்தோடு நிற்கிறேன். இந்த 2 மாதம் தனிப்பட்ட முறையில் கடுமையாக இருந்தது. என் அணியினர் ஆதரவும், உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம்

வலி தெரியும்

வலி தெரியும்

காயம் அதிகமாக ஏற்படுவதால், இனி அடுத்த ஆண்டு என்னால் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியாது. அதனால் தான் எப்படியாவது பட்டம் வாங்க வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தேன். அடுத்த ஆண்டும் இங்கு வந்து விளையாட முயற்சி செய்வேன். மேட்வடெவ் இடத்தில் நான் பல முறை நின்றுள்ளேன். இந்த தோல்வி எப்படி வலிக்கும் என்று எனக்கு தெரியும். இந்த சாதனையை உங்களிடம் நிகழ்த்தினேன் என்று நினைப்பதில் எனக்கு பெருமை என்று கூறினார்.

Story first published: Sunday, January 30, 2022, 21:27 [IST]
Other articles published on Jan 30, 2022
English summary
Australia open 2022 Nadal and Medvedv speech in victory ceremony என் மனைவி டி.வி.யை உடைத்திருப்பார்.. ஆஸி. ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் கல..கல..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X