ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் துவக்கம் -வெற்றிக்கணக்கை துவக்கிய செரீனா

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் தன்னுடைய முதல் வெற்றிக் கணக்கை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் துவக்கி வைத்துள்ளார்.

குழந்தை பேறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றியின் பக்கம் தலைசாய்க்காத செரீனா வில்லியம்ஸ் இந்த தொடரை கைப்பற்றுவதன்மூலம் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைகொள்ளும் தீவிரத்தில் உள்ளார்.

காட்டுத்தீ காரணமாக தடைபடுமா என்ற கேள்வி எழும்பிய நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று துவங்கி வரும் மாதம் 2ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட இருந்த போட்டி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட இருந்த போட்டி

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பரவிவரும் காட்டுத்தீக்கு பலர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆயினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று டென்னிஸ் ஆஸ்திரேலியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

முதல் வெற்றியை பெற்ற செரீனா

முதல் வெற்றியை பெற்ற செரீனா

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இன்று துவங்கி வரும் 2ம் தேதிவரை நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் பங்கேற்றுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

3 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

குழந்தை பேறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடுவதில் இருந்து விலகியிருந்த செரீனா வில்லியம்ஸ், கடந்த வாரத்தில் சர்வதேச ஆக்லாந்து போட்டியில் வெற்றிப் பெற்று தனது வெற்றிக்கணக்கை துவக்கினார்.

எதிராளியை எளிதில் வெற்றிகொண்ட செரீனா

எதிராளியை எளிதில் வெற்றிகொண்ட செரீனா

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் வெற்றி மூலம் தனது 24வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை பெறும் முனைப்பில் தீவிரமாக பயிற்சி பெற்றுவந்த செரீனா வில்லியம்ஸ், தொடரின் முதல் போட்டியில் எதிராளியை எளிதில் வெற்றி கொண்டுள்ளார்.

செரீனா எளிதில் வெற்றி

செரீனா எளிதில் வெற்றி

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்யாவின் இளம் வீராங்கனை அனஸ்தேசியா பொட்டபோவாவை 6க்கு 0 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்கில் செரீனா எளிதில் வெற்றி கொண்டார்.

19 நிமிடங்களில் முடிந்த முதல் செட்

19 நிமிடங்களில் முடிந்த முதல் செட்

இந்த முதல் போட்டியில் முதல் செட்டை 19 நிமிடங்களில் முடித்த செரீனா வில்லியம்ஸ் மொத்தம் 58 நிமிடங்களில் அனஸ்தேசியா பொட்டபோவாவை எளிதில் ஓரங்கட்டினார்.

செரீனா வில்லியம்ஸ் விருப்பம்

செரீனா வில்லியம்ஸ் விருப்பம்

இந்த வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செரீனா வில்லியம்ஸ், தான் இருக்கும் பகுதியில் தன்னுடைய மகள் ஒலிம்பியாவின் அம்மாவாகவே தான் அறியப்படுவதாகவும், அது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Serena Williams Starts her first Victory in Australian Open
Story first published: Monday, January 20, 2020, 12:54 [IST]
Other articles published on Jan 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X