For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலில் டிமிட்ரோவ்.. இப்ப போர்னா கோரிக்.. ஒரே டென்னிஸ் தொடரில் பங்கேற்ற 2 வீரர்களுக்கு கொரோனா வைரஸ்!

ஜடார் : முன்னணி டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதை தொடர்ந்து அவருடன் தொடரில் பங்கேற்ற போர்னா கோரிக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.

டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிக் நிவாரண நிதி திரட்டும் டென்னிஸ் தொடர் ஒன்றை நடத்தினார்.

நான்கு நாடுகளில் நடக்க இருந்தது அந்த தொடர். அந்த டென்னிஸ் தொடரில் செர்பியா, குரோஷியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்கேற்று இருந்தனர்.

Borna Coric tested positive for coronavirus after Grigor Dimitrov

செர்பியாவில் முதல் பகுதி போட்டிகள் நடந்த போது சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் கடைபிடிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. போட்டியைக் காண அரங்கு முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் குரோஷியாவில் நடைபெற்றது. அப்போது கிரிகோர் டிமிட்ரோவ் உடல்நிலை சரியில்லாமல் பாதியில் தொடரில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன.

செரீனாவுடன் விளையாட விரும்புகிறேன்... கேப்ரியல் சபாடினியின் ஆசைசெரீனாவுடன் விளையாட விரும்புகிறேன்... கேப்ரியல் சபாடினியின் ஆசை

கிரிகோர் டிமிட்ரோவ்வுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனை செய்து கொண்டனர்.

தற்போது மற்றொரு முன்னணி வீரர் போர்னா கோரிக்குக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோகோவிக் நடத்திய தொடர் என்பதால் அவர் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை என்பது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

Story first published: Monday, June 22, 2020, 21:45 [IST]
Other articles published on Jun 22, 2020
English summary
Borna Coric tested positive for coronavirus after Grigor Dimitrov, whom attended Adria tour in Zadar. Novak Djokovic faces criticism for not following precautions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X