For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீட்டுக்கட்டு போல சரிந்த விம்பிள்டன் “டாப் சீட்”...... மொத்தமாக வெளியேறும் முன்னணி வீரர்கள்

By Aravinthan R

விம்பிள்டன்: இந்த ஆண்டு விம்பிள்டனில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இது வரை மூன்று சுற்றுக்கள் முடிந்துள்ளன. அதற்குள், “டாப் சீட்” என்று வரிசைப்படுத்தப்பட்ட முன்னணி வீரர்கள் பலரும் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டு, மிகவும் மோசமான முறையில் முன்னணி வீரர்கள் அதிர்ச்சித் தோல்வியடைந்து வருவது, “டாப் சீட்” முறை சரிதானா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்க உள்ள வீரர்கள் தகுதிச்சுற்று போட்டிகளில் வென்றால் தான் அந்த தொடரில் பங்கேற்க முடியும். ஆனால், முன்னணி வீரர்கள் என்று வரிசைப்படுத்தப்படும் வீரர்கள் தகுதிச்சுற்று போட்டிகளில் ஆட வேண்டிய அவசியமில்லை.

டாப் சீட் தர வரிசை

டாப் சீட் தர வரிசை

இந்த டாப் சீட் தரவரிசை, வீரர்களின் ரேங்க் மற்றும் புல்வெளி ஆட்டங்களில் கடந்த ஆண்டில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். விம்பிள்டனைப் பொறுத்தவரை, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 32 வீரர்-வீராங்கனைகள் டாப் சீட் வரிசையில் நேரடியாக தகுதி பெறுவார்கள். இந்த டாப் சீட் வீரர்களே பெரும்பாலும் விம்பிள்டன் பட்டம் வெல்வார்கள்.

5 பேர் மட்டுமே

5 பேர் மட்டுமே

இந்த ஆண்டில் முதல் பத்து சீட்களில் ஆண்கள் பிரிவில் ஐந்து பேரும், பெண்கள் பிரிவில் ஒருவர் மட்டுமே நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதில் பெண்கள் பிரிவில் நேரடி தகுதி பெற்ற 32 பேரில், வெறும் ஏழு பேர் மட்டுமே நான்காவது சுற்றில் ஆட இருக்கின்றனர். ஆண்கள் பிரிவு டாப் சீடில், பத்து பேர் மட்டுமே நான்காவது சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

3 சூப்பர் ஸ்டார்கள்

3 சூப்பர் ஸ்டார்கள்

ஆண்கள் ஒற்றையர் பிரிவை பொறுத்தவரை, ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவாக் ஜோகோவிக் ஆகியோர் நான்காவது சுற்றில் ஆட உள்ளனர். இவர்கள் மூவரே பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ரபேல் நடால் கடந்த சில ஆண்டுகளாக, நான்காது சுற்றை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் ரேங்க்கில் இருக்கும் அவர் இந்த முறை இறுதி போட்டி வரை செல்லாமல் விடுவதில்லை என்ற முனைப்பில் ஆடி வருகிறார்.

செரீனாவுக்கு வாய்ப்பு

செரீனாவுக்கு வாய்ப்பு

பெண்கள் பிரிவில் முதல் ரேங்க்கில் இருக்கும் சைமோனா ஹலேப், சென்ற ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்ற முகுரூசா, முன்னணியில் உள்ள வோச்னியாக்கி, கேவிடோவா, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்த ஆண்டு ஓய்வுக்குப் பின் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள செரீனா வில்லியம்ஸ் வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Story first published: Monday, July 9, 2018, 16:12 [IST]
Other articles published on Jul 9, 2018
English summary
Top seed players exit early at Wimbledon. Only one out of the top 10 seeds are still in the tournament in Women singles.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X