சதமடிக்க காத்திருக்கிறார் நம்பர் 1 பெடரர்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: 20 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி, உலகில் அதிக வயதில் நம்பர் 1 இடம் என்று தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் டென்னிஸ் விளையாட்டின் மூத்தண்ணா சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் அடுத்த இலக்கு, 100 பட்டங்கள் வெல்வது.

கடந்த, 14 மாதங்களில், மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், மூன்று மாஸ்டர்ஸ் பட்டங்கள் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அதிக வயதில், நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனைப் புரிந்தார்.

Federer aims for 100th title

நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நம்பர் 1 இடத்தை பெடரர் பெற்றார்.

பெடரர் கடைசியாக, 2012 அக்டோபர் மாதம் உலகத் தரவரிசையில் நம்பர் 1

இடத்தில் இருந்தார். ரோட்டர்டாம் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் மிகவும் அதிக வயதில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையை பெடரர் புரிந்தார். ஆந்தரே அகாசி 33 வயதில், உலகின் நம்பர் 1 வீரரானார். தற்போது 36 வயதாகும் பெடரர் அந்த சாதனையை முறியடித்தார்.

பெடரர், 2004 பிப்ரவரி 2ம் தேதி முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் மீண்டும் அமர்ந்துள்ளார்.

நடுவில் நான்கரை ஆண்டுகள் எந்தப் பட்டமும் வெல்லாமல் இருந்த பெடரர், மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். நேற்று நடந்த ரோடர்டாம் கோப்பைக்கான பைனலில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-2 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம், தனது 97வது பட்டத்தை பெடரர் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் அதிகபட்சமாக, 109 பட்டங்களை வென்றுள்ளார். மிக விரைவில், 100வது பட்டத்தை நெருங்குவதே, பெடரரின் அடுத்த குறி. தற்போது அவர் உள்ள பார்மில், அது நிச்சயம் சாத்தியமே.

Story first published: Monday, February 19, 2018, 10:55 [IST]
Other articles published on Feb 19, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற