மீண்டும் நம்பர் 1 இடத்தில் ரோஜர் பெடரர்!

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகத் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விளையாட்டுக்கு வயது ஒரு தடையேயில்லை என்பதை பலரும் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரரான நமது கேப்டன் கூல் டோணி முதல் கொண்டு, மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் அசத்தி வரும் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், செஸ் கிங் விஸ்வநாதன் ஆனந்த் என பலரை உதாரணம் காட்டலாம்.

டென்னிஸ் விளையாட்டில், தற்போதைய நிலையில், மிகவும் சீனியர் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அடுத்தது யார்' என்று கேட்டு, ஒவ்வொரு போட்டியாக வென்று வருகிறார்.

சொந்த சாதனையை முறியடித்தார்

சொந்த சாதனையை முறியடித்தார்

இந்த ஆண்டில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்தார் ரோஜர் பெடரர். ஆடவர் பிரிவில் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று, தனது சொந்த சாதனைகளை தொடர்ந்து முறியடிக்கும் ஒரே வீரர் ரோஜர் பெடரர்.

சைலண்டாக இருந்தவர் வயலண்டானார்

சைலண்டாக இருந்தவர் வயலண்டானார்

உலக டென்னிஸ் வரலாற்றில், நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் என்ற வகையில், சில காலம் சைலண்டாக இருந்த பெடரர், தற்போது டாப் கியரில் உள்ளார். சிட்டுக்குருவி லேகியம் ஏதோ சாப்பிட்டதுபோல், மைதானத்தில் பறந்து பறந்து விளாசி வருகிறார். தன்னுடைய அனுபவத்துடன் ஒப்பிடுகையில், குழந்தைபோல் உள்ள வீரர்கள் எல்லாம், அவருடைய ஆட்டத் திறனுக்கு முன் நிற்க முடியாமல் சிதறி ஓடுகின்றனர்.

நம்பர் 1 இடத்தை பிடிக்க உள்ளார்

நம்பர் 1 இடத்தை பிடிக்க உள்ளார்

20 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதுடன் நிற்காமல், அடுத்ததாக, மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க ரோஜர் பெடரர் தயாராகி விட்டார். நரைச்சாலும் தல தல தான் என்பது போல், அதிரடி காட்டுவதற்காக, அடுத்த வாரம் நடைபெற உள்ள நெதர்லாந்தில் நடக்க உள்ள ரோடர்டாம் போட்டியில் பெடரர் பங்கேற்க உள்ளார்.

நம்பர் 1 ஆக பெடரருக்கு வாய்ப்பு

நம்பர் 1 ஆக பெடரருக்கு வாய்ப்பு

இந்தப் போட்டியில் அரை இறுதியில் நுழைந்தாலேயே, உலகின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெடரர் பெறுவார். தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ள ரபேல் நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், நம்பர் 1 இடம் பெடரருக்கு நிச்சயம். பெடரர் கடைசியாக, 2012 அக்டோபர் மாதம் உலகத் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்தார்.

அகாசியின் சாதனையை முறியடிப்பார்

அகாசியின் சாதனையை முறியடிப்பார்

ரோட்டர்டாம் போட்டியில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தால், மிகவும் அதிக வயதில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனைய பெடரர் புரிவார். ஆந்தரே அகாசி 33 வயதில், உலகின் நம்பர் 1 வீரரானார். தற்போது 36 வயதாகும் பெடரர் அந்த சாதனையை முறியடிக்கத் தயாராகி விட்டார்.

Story first published: Friday, February 9, 2018, 15:04 [IST]
Other articles published on Feb 9, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற