For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ முந்தி நான் முந்தி.. 10 வருடமாக சீசா விளையாடி வரும் பெடரர், நடால்!

By Aravinthan Rm

ஜெனீவா: ரோஜர் பெடரர் கடந்த திங்கள்கிழமை வெளியான ஏடிபி (ATP) டென்னிஸ் ரேங்கிங்கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல. இதுவரை, ஐந்து முறை முதலிடத்தில் இருந்துள்ள அவர், தற்போது ஆறாவது முறையாக டென்னிஸ் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்டுட்கார்ட் ஓபன் (Stuttgart Open) தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தன் முதலிடத்தை உறுதி செய்ததோடு மட்டுமில்லாமல், அந்த தொடரின் இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று, தன் 98வது பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

பெடரரின் முன்னேற்றத்தால், ரபேல் நடால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் என்ன ஆச்சரியம்? ஒருவர் முன்னேறினால், மற்றொருவர் பின்னே சென்று தானே ஆக வேண்டும்!

இப்படி எப்போதாவது ஒரு முறை பெடரரும், நடாலும் முதல் இரண்டு இடங்களை மாற்றிக் கொண்டால் பரவாயில்லை. இந்த ஆண்டு மட்டும், ஐந்து முறை இப்படி முதல் இடத்தை மாற்றிக்கொண்டு டென்னிஸ் களத்துக்கு வெளியே தனியாக ஒரு சீசா ஆட்டத்தை ஆடி வருகிறார்கள்.

சீசா விளையாட்டு

சீசா விளையாட்டு

இந்த ஆண்டு இன்னும் ஆறு மாதங்கள் கூட முழுதாக முடியாத நிலையில், ஆண்டின் இறுதிக்குள் மேலும் சில முறை இந்த மாற்றம் தொடரவும் வாய்ப்புள்ளது. நடால் இன்னும் 150 புள்ளிகள் பெற்றால், பெடரரை முந்தி விடலாம். அதே போல், பெடரர் முதலிடத்தை இழக்காமல் இருக்க, தற்போது நடந்து வரும் ஹாலே (Halle) தொடரின் அனைத்து போட்டிகளிலும் வென்று பட்டத்தை தக்க வைக்க வேண்டும்.

யார் பெஸ்ட்

யார் பெஸ்ட்

ஏற்கனவே, பெடரர் மற்றும் நடாலின் ரசிகர்கள் யார் சிறந்தவர் என இணையத்தில் பஞ்சாயத்து நடத்தி வரும் நிலையில், இந்த முதலிட போட்டி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளது. சரி, இந்த ஒரு வருடம்தான் இருவரும் சீசா போல ரேங்கிங்கை மாற்றி வருகிறார்கள். அதெப்படி, பத்து வருடம் என்கிறீர்களா?

சாதனை நாயகன் பெடரர்

சாதனை நாயகன் பெடரர்

பிப்ரவரி 2004ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2008 வரை சுமார் 237 வாரங்கள் தொடர்ச்சியாக டென்னிஸ் ரேங்கிங்கில் முதலிடத்தில் இருந்து பெரும் சாதனை படைத்தார் பெடரர். அந்த காலகட்டத்தில், டென்னிஸ் ஜாம்பவான்கள் கூட பெடரரை முந்த முடியவில்லை. கடைசியில், பெரும் முயற்சிக்கு பின், தன் தொடர் வெற்றிகள் மூலம் நடால், பெடரரை முந்தினார்.

ஆறு முதல் முதல் இடம்

ஆறு முதல் முதல் இடம்

அதன் பின் இருவரும் இந்த சீசா ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். இடையில், ஜோகோவிச் மூன்று முறையும், ஆண்டி முர்ரே ஒரு முறையும் முதல் இடத்தை கைப்பற்றியதை தவிர்த்து, இதுவரை, பெடரரும், நடாலும் ஆறு முறை முதல் இடத்தை பிடித்துள்ளார்கள்.

பெடரர் இதுவரை 310 வாரங்கள்

பெடரர் இதுவரை 310 வாரங்கள்

பெடரர், இதுவரை மொத்தமாக 310 வாரங்கள் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதுவே, டென்னிஸ் வரலாற்றில் அதிகம். நடால் 177 வாரங்கள் மட்டுமே முதல் இடத்தில் இருந்துள்ளார். பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்று அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க, நடால், 17 பட்டங்களுடன் பின்னே துரத்திக் கொண்டு வருகிறார்.

இருவருக்குமான இந்த போட்டி, இன்னும் சில ஆண்டுகளாவது நீடிக்கும் என தெரிகிறது. அதுவரை, இவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Story first published: Wednesday, June 20, 2018, 12:45 [IST]
Other articles published on Jun 20, 2018
English summary
Tennis supe stare Roger Federer is back as No 1 in latest ATP rankings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X