For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடால் – பெடரர் மோதல் மிஸ்ஸிங்

By Staff

நியூயார்க்: கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடந்தால் எந்த அளவுக்கு பரபரப்பு இருக்குமோ, ஆக்ரோஷமான போட்டி இருக்குமோ அதற்கு இணையானது டென்னிஸில் ரோஜர் பெடரர் - ரபேல் நடால் இடையேயான போட்டி.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டியில், இதுவரை இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததில்லை. இதற்கு முன், ஐந்து முறை வாய்ப்புகள் ஏற்பட்டு, இருவரும் நேரிடையாக சந்திக்க முடியாமல் போனது.

Federer failed to meet Nadal


இந்த முறை அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நடால், ரஷியாவின், ஆன்ட்ரே ரூப்லோவை, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் வென்று, அரை இறுதிக்கு முன்னேறினார்.

அரை இறுதியில், ரோஜர் பெடரரை சந்திக்க, துப்பாக்கி விஜய் போல், ஐ எம் வெயிட்டிங்' என்று காத்திருந்தார்.

நேற்று நள்ளிரவில் நடந்த போட்டியில், சுவிஸ் ஜாம்பவான், 36 வயதாகும் ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் பெட்ரோவை சந்தித்தார்.

19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், அதில், 5, யுஎஸ் ஓபன் பட்டம் என்று சாதனை திலகமாக இருக்கும் பெடரரை எதிர்த்து, பேய்கள் உலவும் நள்ளிரவில் பேய் போய் விளையாடினார் பெட்ரோ.

7-5, 3-6, 7-6 (10-8), 6-4 இந்த கணக்கை பார்த்தாலே, தரவரிசையில் 4வது இடத்தில் பெடரருக்கு எந்த அளவுக்கு கடுமையான போட்டி கொடுத்து, 24வது இடத்தில் இருக்கும் பெட்ரோ வென்றார் என்பது தெரியும். அதனால், நடாலின் வெயிட்டிங் வீணானது.

நடால் - பெடரர் இதுவரை, 37 முறை நேரிடையாக மோதியுள்ளனர். அதில் 23-14 என நடால் முன்னிலையில் உள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் 9-3 என நடால் முன்னிலையில் உள்ளார்.
Story first published: Thursday, September 7, 2017, 18:43 [IST]
Other articles published on Sep 7, 2017
English summary
Tennis giants Federer and Nadal clash in semi finals end in dismay, Federer looses in quarters of the US Open
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X