பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற 19 வயது இளம் புயல்.. ரெக்கார்டு பிரேக் வெற்றி!

பாரிஸ் : 2௦20 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் 19 வயதே ஆன இகா ஸ்வியாடெக்.

இவர் போலாந்து நாட்டை சேர்ந்தவர். அந்த நாட்டில் இருந்து டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் நபர் இகா ஸ்வியாடெக் தான்.

2020 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.

இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், இகா ஸ்வியாடெக் தகுதிச் சுற்றில் போட்டியிட்டு வென்று மெயின் டிராவில் போட்டியிட்டார்.

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 54வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 19 வயதே ஆன வீராங்கனை என்பதால் இகா ஸ்வியாடெக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் சோபியா கெனினை சந்தித்தார். இந்த பரபரப்பான இறுதிப் போட்டி ஒரு மணி நேரம், 24 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் 6 - 4, 6 - 1 என்ற நேர் நெட்செட் கணக்கில் வெற்றி பெற்றார் இகா ஸ்வியாடெக்.

நன்றாக ஆடியும்.. அந்த 2 வீரர்களை ஒதுக்கிய தோனி.. அதிர்ந்த ரசிகர்கள்.. ஷாக் சம்பவம்!

பிரெஞ்சு ஓபன் மெயின் டிராவில் இகா ஸ்வியாடெக் இரண்டாவது முறையாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007இல் ஜஸ்டின் ஹெனின் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஒரு செட் கூட தோற்காமல் பட்டம் வென்றார். அவருக்கு பின் அதே சாதனையை செய்துள்ளார் இகா ஸ்வியாடெக்.

மேலும், மெயின் டிராவில் ஸீடிங் பெறாமல், தகுதிச் சுற்று மூலம் இடம் பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் செய்துள்ளார் இகா ஸ்வியாடெக்.

பிரெஞ்சு ஒபனில் மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் மோனிகா செலஸ் (16), அரங்ஸா சான்சேஸ் (17), ஸ்டெபி கிராப் (17) ஆகியோரை அடுத்து நான்காம் இடம் பிடித்துள்ளார் 19 வயதே ஆன இகா ஸ்வியாடெக்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
French Open 2020 : 19 year old Iga Swiatek won French open title. She is the first from Poalnd to win a grandslam titile.
Story first published: Sunday, October 11, 2020, 0:32 [IST]
Other articles published on Oct 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X