For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தரவரிசையில் 2018ல் 72வது இடம்.. 2019ல் முதலிடம்.. ஆஸி.ஓபனில் க்விட்டோவாவை வீழ்த்தி ஒசாகா சாதனை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றதுடன் தர வரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. அதில் மகளிர் ஒற்றையர் இறுதிசுற்றில் செக் குடியரசின் பெட்ரா க்விட்டோவாவும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் தங்களது சர்வீஸ்களை மட்டுமே புள்ளிகளாக பெற்றதால் முதல் செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7க்கு 6 (7-2) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.

ஆட்டம் சமம்

ஆட்டம் சமம்

2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த க்விட்டோவா 7க்கு 5 என வென்று பதிலடி கொடுக்க ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டது. 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடினார் க்விட்டோவா.

சர்வீசை முறியடித்த ஒசாகா

சர்வீசை முறியடித்த ஒசாகா

பரபரப்பான இந்த ஆட்டத்தில் க்விட்டோவின் சர்வீசை ஒசாகா முறியடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் போக்கு ஒசாகா பக்கம் திரும்பியது. மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு க்விட்டோவாவை திணறடித்தார்.

வென்றார் ஒசாகா

வென்றார் ஒசாகா

முடிவில். ஒசாகா 7க்கு 6 (7-2), 5க்கு 7, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி 27 நிமிடத்துக்கு நீடித்தது. கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் இறுதியாட்டத்தில் செரீனாவை வீழ்த்தி தமது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஒசாகா வென்றிருந்தார்.

நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற்றம்

நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற்றம்

தற்போது 2வது பட்டத்தை கைப்பற்றியதுடன் மகளிர் ஒற்றையர் பிரிவு தர வரிசையில் முதலிடத்துக்கும் முன்னேறினார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒசாகா 72வது இடத்தில் இருந்த ஒசாகா, இந்த வெற்றியின் மூலம், உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஒசாகா புதிய சாதனை

ஒசாகா புதிய சாதனை

2015ம் ஆண்டு செரீனா தொடர்ச்சியாக 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த நிலையில், அதன் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் 21 வயதான ஒசாகா பெற்றுள்ளார். புதிய தரவரிசை பட்டியலில் அவர் நம்பர் ஒன் இடத்தை அலங்கரிப்பார்.

பரிசுத்தொகை ரூ.20 கோடி

பரிசுத்தொகை ரூ.20 கோடி

ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். பட்டம் வென்ற ஒசாகாவுக்கு ரூ.20¾ கோடியும், க்விட்டோவாவுக்கு ரூ.10½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

Story first published: Sunday, January 27, 2019, 10:55 [IST]
Other articles published on Jan 27, 2019
English summary
Japan's Naomi Osaka beat Czech Petra Kvitova in a thrilling Australian Open final to win back to back Grand Slams and become the new world number one.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X