For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரியா ஷரபோவா யாருன்னு எங்களுக்கு தெரியாதே... ட்விட்டரில் இப்போ இதான் டிரெண்ட்!

By Veera Kumar

சென்னை: சச்சினை யாருன்னு தெரியாதுன்னு மரியா ஷரபோவா சொன்னாலும் சொன்னார், இந்தியாவில் ரத்தம் சூடேறி கிடக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். நாடு விட்டு நாடு போய் ஷரபோவா பேஸ்புக்கில் திட்டி தீர்த்ததோடு அமைதியடையவில்லை அவர்கள். தங்களது ட்விட்டர் பக்கத்திலும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டனர்.

மரியாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக யார் மரியா ஷரபோவா என்ற ஹேஸ்டேக் போட்டு ட்விட் செய்ய ஆரம்பித்து அதை டிரெண்ட்டாக உருவாக்கி சாதனை படைத்துவிட்டனர் சாதனை நாயகனின் ரசிகர்கள். இந்தியா முழுக்க ஷரபோவாவின் விமர்சனம் குறித்த பார்வை ஒரே போன்று உள்ளபோதிலும், தமிழ் கீச்சர்களோ அதற்கு எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளது அவர்கள் கீச்சுகளி்ல் இருந்து தெரியவருகிறது.

சச்சின் டெண்டுல்கரை, வட இந்திய கிரிக்கெட் வீரராக சற்று தூரத்தில் தமிழர்கள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், எதையும் பகுத்தறிந்த பிறகுதான், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழர்களுக்கு இருப்பதையும், ட்விட்டர் கீச்சுக்கள் உறுதி செய்கின்றன.

புடுச்சி கடிங்க சார்..

உலக கோப்பை கால்பந்தாட்டத்தில், இத்தாலி வீரரை உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் கடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மரியா ஷரபோவா சச்சினை தெரியாது என்று கூறியதை கேட்டு, "இதுக்குத்தான் நான் எல்லோரையும் கடிக்கிறது" என்று கூறுவதை போல படத்தை ஒட்டி செய்யப்பட்டுள்ள இந்த ட்விட்டை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

பாலோவர் எத்தனை தெரியுமா?

பேஸ்புக்கில் சச்சினுக்கு 2 கோடிக்கு மேலே ரசிகர்கள் உள்ளனர். ஆனால் மரியாவுக்கு அதில் பாதிதான் உள்ளனர். டிவிட்டரில் சச்சினுக்கு 4.38 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். மரியாவுக்கு 1.1 மில்லியன்தான். இதை குறித்து வகுப்பெடுத்துள்ளார் இந்த கீச்சர்.

கடவுளே.. மன்னிச்சுடுப்பா..

சச்சினை பார்த்து கடவுளே (கிரிக்கெட்டுக்கு) என்னை மன்னித்து விடுங்கள் என்று மண்டியிட்டு கெஞ்சுவதை போல போட்டோ ஷாப் செய்துள்ளனர் இந்த ட்வீட்டில்.

பாம்பேயில அவர் என்ன பண்ணிகிட்டு இருந்தார் தெரியுமா..?

சச்சின் பெவிலியனில் இருந்து பேட்டிங் செய்ய கிளம்பும்போது அவரை பார்க்க கண்களில் ஆவலோடு எதிர்படும் ரசிகர் கூட்டத்தையும், மைதானத்துக்குளேயே சென்று சச்சின் காலில் விழும் ரசிகர்களையும், என பல வகை ரசிகர்கள் குறித்த படங்களை போட்டுள்ளார் இந்த கீச்சர்.

சாரு மரியாதையான ஆளு..

சச்சின் டெண்டுல்கர் மைதானத்தை தொட்டு கும்பிடுவதையும், மரியா ஷரபோவா டென்னிஸ் வலை மீது காலை வைத்து ஷூ லேஸ் கட்டுவதையும் ஒப்பிட்டு போட்டு, விளையாட்டுக்கு மரியாதை கொடுப்பவரு எங்க ஆளு, என்ற ரேஞ்சில் இந்த ட்விட் செய்யப்பட்டுள்ளது.

வீர விளையாட்டு கபடி

தமிழரின் வீர விளையாட்டு கபடி. இதை பற்றி தமிழ்நாட்டுக்காரர்களே கண்டுகொள்வதில்லை என்பதை நெத்திப்பொட்டில் அடித்துச் சொல்லுது இந்த ட்விட். ரஷ்யாவில் கிரிக்கெட் விளையாட்டு கிடையாது. எனவே அவருக்கு அதைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. பிறந்தது முதல் கபடி விளையாடிய தமிழா, நமது நாட்டின் கபடி அணி கேப்டன் பெயர் தெரியுமா என்று கேட்கிறது இந்த கீச்சு.

தமிழன்டா..

தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில், செஸ் விளையாட்டில் புகழ் பெற்றவர். ரஷ்யாவில் செஸ் பிரபலம். எனவே, ஆனந்தை பற்றி ஷரபோவா, இப்படி கேட்டிருக்க வாய்ப்பில்லை. இதை வைத்துதான் இந்த ட்விட்டில் விஸ்வநாதன் ஆனந்த், ஒரு தமிழன் என்று பெருமை பொங்க கூறுகிறார் இந்த கீச்சர்.

கடவுளை தெரியாதா?

கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்படுகிறார். அவரை தெரியாது என்றதன் மூலமாக ஷரபோவா நாத்தீகவாதியா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த ட்விட்.

அம்மா, அப்பாவை பாருங்கப்பா..

ஷரபோவாவுக்கு, சச்சின் தெரிவது கிடக்கட்டும்.. உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் அம்மா, அப்பா பிறந்தநாள் தேதி தெரியும் என்று கேலி கலந்த வேதனை குரலை ஒலிக்கிறது இந்த ட்விட்டில்.

என்னது கூகுளில் காணோமா..?

சச்சினை தெரியாது என்று கூறி மனவேதனை படுத்திய ஷரபோவாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்த ட்விட்டர் பதிவாளர். ஷரபோவா பெயரை கூகுளில் தேடுவது போல புகைப்படம் உருவாக்கி, அதில் கூட அவரது பெயர் கிடைக்காதது போல காண்பித்துள்ளார். வடிவேலுவுக்கு ஜாமீன் கேட்டு போன உதவியாளர்கள், ஜாமீன் கடலிலேயே இல்லையாம் என்று கூறுவதை இதற்கு உதாரணமாக காண்பித்துள்ளார் இந்த பதிவர்.

Story first published: Thursday, July 3, 2014, 16:43 [IST]
Other articles published on Jul 3, 2014
English summary
Sachin Tendulkar, Maria Sharapova names now becomes trend in Twitter. While other parts of the India thinks same way, Tamil twitters thinks an another way.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X